கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் குங்குமப்பூ

கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமீன் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இவர்கள் எலியைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவுகளில் கொடுத்து வந்தனர்.

பின்னர் செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டை எத்தில் நைட்ரோசமைன்(டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில், அதிக அளவில் குங்குமப்பூ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.

இதன் மூலம் குங்குமப்பூ கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் என உறுதி செய்தனர். உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது என அமீன் தெரிவித்தார்.


ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..

இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil – Kungumapoo

English – Saffron

Malayalam – Kunguma Poo

Telugu – Kumkuma poova

Sanskrit – kumkuma

Botanical Name – Crocus sativus

இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.

இரத்தம் சுத்தமடைய

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.

ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை .


குங்குமப்பூ மகத்துவம்

சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.

குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

5. முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

6. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

7. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறி அசத்தலாம்.மேலும் கர்ப்பிணிகள் பாலில்குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டால் குழந்தை மிகவும் சிவப்பாக இருக்கும்
இணையத்திலிருந்து அள்ளித் தருபவர்………

இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு.

அமீருல் அன்சார் மக்கி

ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்வது இளைஞர் சமூகம்தான். ஒரு சமூகத்தின் வெற்றியும் வீழ்ச்சியும் அவர்கள் கையிலேயே உள்ளது.

ஒரு சமூகத்தில் நல்ல மாற்றம் வருவதற்கு பங்களிப்பு செய்பவர்கள் இளைஞர்களே. இதனால்தான் ஆண்மீகவாதிகள் தொடக்கம் அரசியல் வாதிகள்வரை இவர்களை தவறான அடிப்படையில் வழிநடாத்தி தமது விருப்பங்களையும் எண்ணங்களையும் சமுகத்தில் பிரதிபலிக்கச் செய்கிறார்கள்.

இதனால் இளமைப் பருவத்தை சரியான முறையில் பயன்படுத்துவதென்றால் அந்த சமூதாயத்தில் உள்ள பெற்றோரின் கண்காணிப்பு இன்றியமையாததாகும்.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் இளமைப் பருவம் மிகமுக்கியமானது. இந்தப்பருவத்தில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு அவனது தூதரின் வாழ்க்கையைப் பின்பற்றி நடப்பது என்பது இஸ்லாத்;தில் மகத்தான நன்மையைப் பெற்றுத்தரும் என்பதை ஹதீஸ்களில் காணலாம்.

அர்ஷில் நிழல் பெறும் ஏழு கூட்டத்தினரில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வளர்ந்த இளைஞரும் ஒருவர் என நபியவர்கள் அடையாளப் படுத்துவது இந்தப் பருவத்தின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது.

இந்தப் பருவம் எல்லோராலும் மதிக்கப் பட்டு எல்லோரும் வாழ்கையின் யதார்தத்தைப் புரிந்து அடியெடுத்து வைக்கவேண்டிய காலப் பகுதியாகும். இதனால்தான் இஸ்லாம் இதற்க்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இளைஞர்கள் தமது மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு ஷைத்தானிய சக்திகளால்; வழிகெடுக்கப் பட்டு இஸ்லாமிய வழி முறைகளை மீறி செயல்படுகின்றனர்.

இதிலிருந்து இவர்களைப் பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு என்பது மிக முக்கியமானதாகும். பருவமடைந்த வயதிலிருந்து 19வயது வரை “ரீனேஜ்” பராயத்தினர் என அழைக்கின்றனர். ஆனால் இஸ்லாம் இளமைப்பருவம் பற்றிய விடயத்தை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

“அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் .

இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்)” (அல்குர்ஆன் 40:67)

இதில் குழந்தைப் பருவத்திற்க்கும் முதுமைப் பருவத்திற்க்கும் இடைப்பட்ட காலப் பகுதியை இளமைப்பருவமாக இஸ்லாம் கூறுகிறது. என்றாலும் இதில் திருமணத்திற்கு முந்திய காலப் பகுதி மிக முக்கியமான பகுதியாகும்.

இவ்வயது பராயத்தினர் எதிர் கொள்ளும் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. ஆனால் பெற்றோர்கள் இவற்றைப் பற்றி சிந்திக்காது வாழ்கையின் வேறு பல விடயங்களுக்கும் தமது முன்னேற்றத்திற்குமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திடீரென தமது பக்குவமற்ற வயதில் உள்ள பிள்ளைகள் ;விடுவிக்கப்பட முடியாத அல்லது இழப்பீடு செய்ய முடியாத சிக்கலில் சிக்கிய பின்னர்தான் திரும்பிப் பார்க்கின்றனர் என்ற விஷயம், தினசரி சந்திக்கும் சம்பவங்கள் அனுபவங்கள் மூலம் அறிய முடிகின்றது.

இதனால் இஸ்லாம் இந்த வயதினர் விடயத்தில் பாரிய பொறுப்பை பெற்றோரிடம் பொறுப்புச்சாட்டுகிறது. அவ்வாறான பொறுப்பை சுருக்கமாக பார்ப்போம்.

01 நல்லமுறையில் உபதேசம் செய்தல் :

பக்குவமற்ற இளம் வயதினர் நல்லது கெட்டது தொடர்பாக சீர்தூக்கி வேறுபடுத்தி தீர்மானங்கள் எடுக்க முடியாத வயதினர்.

இவர்களின் அனுபவமற்ற தன்மையும் அறியாமையும் இவர்கள் தவறுகளில் சிக்குவதற்;க்கும் காரணமாக இருக்கின்றன.

இதனால் இவர்களது நடவடிக்கைகள் மீது பெற்றோர்கள் கண்காணிப்பாக இருப்பதுடன் அவர்களது மனநிலைகளைப் புரிந்து அவர்களுக்கு ஒரு நல்ல ஆலோசகராகவும் அவர்களுடன் நட்பாகவும் அதேநேரம் கட்டுக்கோப்பாகவும் வழிநடாத்த வேண்டும்.

இதனை ஸூரத்து லுக்மானில் லுக்மான் அலை அவர்கள் தனது மகனுக்கு செய்த உபதேசத்தின் மூலம் அல்லாஹ் அழகாக பின்வருமாறு தெளிவுபடுத்துகிறான்.

“இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு ”என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,”” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக)”. (அல்குர்ஆன் 31:13)

“(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும்,

அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்”. (அல்குர்ஆன் 31:16)

”என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக நிச்சயமாக இதுவே உறுதியான செயல்களில் உள்ளதாகும்” (அல்குர்ஆன் 31:17)

”(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” (அல்குர்ஆன் 31:18)

”உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.” (அல்குர்ஆன் 31:19)

நாமும் எமது பிள்ளைகள் விடயத்தில் இது போன்ற நல்ல உபதேசங்களை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனை எடுத்துக் கூறுகிறான்.

02 எமது பிள்ளைகள் விடயத்தில் ஆழ்ந்த கண்காணிப்பு அவசியம் பெற்றோர்களாகிய நாம் எமது பிள்ளைகள் விடயத்தில் ஆழ்ந்த கண்காணிப்புடன் செயற்பட வேண்டும்.

ஆனால் பெற்றோர்களில் பலர் பொருளாதாரம், தமதுமுன்னேற்றங்கள், மேலும் தமதுபதவி உயர்வு, உயர்கல்வி, அவற்றில் போட்டிகள், பொருள் தேடுதல், மற்றும் அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முழுமூச்சாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமது பிள்ளைகள் கல்வி நடவடிக்கையிலேயே முற்றுமுழுதாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.

சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுக்கு வீடுகளில் தனிமையே துணையாகின்றது. இவர்களுக்கு தனிமை என்பது மிகவும் ஆபத்தான விடயம் என்பதை எவரும் உணர்வதில்லை. இதனால்தான் நபியவர்கள் கூறுகிறார்கள்.

“நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்பைப் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள் ஒரு குடும்பத் தலைவன் அந்தக் குடும்பத்தின் மீது பொறுப்புதாரியாவான் ” (ஆதாரம புகாரி, முஸ்லிம்;)

எனவே குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவன் குறிப்பாக குடும்பம் பற்றிய கண்காணிப்பில் இருக்க வேண்டும் .அதனால்தான் அல்லாஹ் மேலும் ஒரு வசனத்தில் பின்வருமாறு கூறுகிறான்.

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவியதற்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள் (அல்குர்ஆன் 66:6)

source: http://www.srilankamoors.com/files/_57.pdf

தீமை தீயினும் தீது.

ஆபூ ஆஷிக்

[ கேட்டால் ”எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொள்வான்”. அவனுடைய தீனை மட்டும் உங்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறானா?!

 

நபிமார்களும் இந்தப் பணியைத்தான் செய்தார்கள். நன்மையை மட்டும் ஏவி இருந்தால், தீமையை தடுக்காமல் இருந்திருந்தால் எந்த நபிக்கும் அடி விழுந்திருக்காது. எந்த நபியும் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.

அந்த நபிமார்களுடைய வேலையைச் செய்வதாகச் சொல்லும் நீங்கள் எங்கேயாவது அடி வாங்கி இருக்கிறீர்களா? எப்படி வாங்குவீர்கள். நீங்கள் தான் எந்த தீமையையும் தடுப்பதில்லையே! ]

 

இமாம் தொழுகை முடிந்து துஆ ஓதி முடிந்ததும் நண்பர் எழுந்து சென்று ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார்….

பள்ளிக்கு வெளியே வந்ததும் அந்த நண்பரிடம், ”பாய் பள்ளியிலும் இந்த கிதாபை படிக்கச் சொல்றீங்க வீட்டிலும் அதையே படிக்கச் சொல்றீங்க. அதைப்படிச்சு அறிவு வளரும்னு சொல்லாம பரக்கத் வரும்னு வேறு சொல்றீங்க! எதுக்காக குர்ஆனை இருட்டடிப்பு செய்யறீங்க?” என்று கேட்டேன்.

 

”இல்லை பாய்! நீங்க சொலறது தப்பு. குர்ஆனை படிச்சா எல்லாருக்கும் புரியாது.(!) அது ஆலிம்களுக்கும் பெரியார்களுக்கும் மட்டும் தான் புரியும். அதனாலதான் அதனுடைய சாராம்சத்தை எடுத்து கிதாபிலே தந்திருக்காங்க.” அவர்.

 

”அல்லாஹ் – நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டே இந்த வேதத்தை நாம் எளிமையாக்கி இருக்கிறோம். இதன் மூலம் அறிவு பெறுவார் உண்டா?” என்று கேட்கிறான். நீங்க என்னடான்னா குர்ஆன் புரியாதுன்னு சொல்லி புதுசு புதுசா கதை விடுறீங்க.

எம்பெருமானார் முஹம்மதுநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியும் கூட அவற்றைக் கொண்டு அவர்கள் ஒரு போதும் மிகையாகச் சொல்லவில்லை. மதத்தைப் பரப்ப அந்த அற்புதங்களை துணைக்கு அழைக்கவில்லை.

”ஒவ்வொரு நபிமார்களுக்கும் அல்லாஹ் ஒவ்வொரு அற்புதங்களை கொடுத்திருக்கிறான், எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் இந்த குர்ஆன்தான்” என்றார்கள். அத்தகைய அற்புதமாகிய குர்ஆனை விட்டு விட்டு எதற்காக மிகைப்படுத்தப்பட்ட கதைகளை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.”

 

”பாய், மொத்தத்திலே இந்த வேலையோட நோக்கம் என்னன்னா மக்களை பள்ளியோட தொடர்புள்ளவங்களா மாத்தனும். எல்லாரும் தொபு ஆரம்பிச்சுட்டாங்கன்னா தீமையே இல்லாம போயிடும். எல்லா முஸ்லிம்களும் சொர்க்கத்துக்கு போகனும். அதுக்காக சில விஷயங்களை கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லி இருப்பாங்க அவ்வளவுதான்” என்றார்.

”சரி எல்லாரும் தொழ ஆரம்பிச்சுட்டாங்கன்னா தீமையே இருக்காதாக்கும்?”

”தொழுகையாளிகளே தப்பு செய்றாங்களே!

தொழுகையாளி சகுணம் பார்க்கிறார். குறி கேட்கிறார், திருஷ்டி கழிக்க வீட்டிலே, கடையிலே சூடம் கொளுத்துகிறார்!

தொழுகையாளி அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்கிறார். தர்காக்களுக்கு சென்று ஆடு அறுக்கிறார். பிள்ளைகளுக்கு மொட்டை போடுகிறார். இந்த வைபவங்களிலெல்லாம் இன்னபிற தொழுகையாளிகளும் கலந்து கொள்கிறார்கள். நபிமார்களுடைய வேலையைச் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் நபர்களும் பங்கெடுக்கிறார்கள்!

தொழுகையாளி புதிதாக வீடுகட்டும் பணி ஆரம்பிக்கும் முன்னர் பூமி பூஜை செய்கிறார்! வாஸ்து பார்த்து வீடு கட்டுகிறார். புது வீட்டில் குடி புகுமுன் வனதேவதைகளை திருப்திபடுத்த ”கழிப்பு” கழிக்கிறார்! (புதிதாக கட்டப்படும் பள்ளிவாசல்களிலேயே மேற்பழ சமாச்சாரங்கள் நடப்பதாக கேள்வி)

ஏதாவது பூச்சிக் கடித்துவிட்டால் பூசாரியிடம் போய் ஓதிப்பார்க்கும் தொழுகையாளி இருக்கிறார்!

தொழுகையாளி வதந்தியை பரப்புகிறார். பள்ளிக்குள்ளேயே உட்கார்ந்து யார் யாரோடு ஓடிப்போனார்கள் என்பது போன்ற வீணான பேச்சுகளில் ஈடுபடுகிறார்!

தொழுகையாளி தன்மகன் திருமணத்திற்கு வரதட்சணை வாங்குகிறார். அந்தப் பணத்தை அந்த ஊரிலே உள்ள இமாம் அல்லது முக்கியஸ்தர் பெண்ணின் தந்தையிடம் வாங்கி மாப்பிள்ளையின் தந்தையிடம் ரொம்பவும் பவ்யமாக கொடுப்பார். இந்த கேடுகெட்ட நிகழ்ச்சியிலே தொபுகையாளிகள் கலந்து கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சி புனிதம் ஏற்ற முடிவிலே இமாம் அவர்களால் துஆவும் ஓதப்படுகிறது!

தொழுகையாளி தன் மகளின் பூப்பனித நீராட்டு விழாவுக்கு கார்டு அடித்து விருந்து கொடுக்கிறார்! இமாம் உட்பட தொழுகையாளிகள் யாவரும் அதில் கலந்து கொள்கிறார்கள்!

தொழுகையாளி வியாபாரத்தில்; பொய் பேசுகிறார். 100 ரூபாய் பொருளை 300 ரூபாய்க்கு விற்கிறார். கேட்டால் இஸ்லாத்தில் லாபம் எவ்வளவு வேண்டுமானாலும் வைத்து விற்கலாம் என்கிறார்! (இமாம்களே! அப்படியா?)

தொழுகையாளி திருட்டு சி.டி. விற்கிறார்! குருவியாகப் பறந்து அண்ணிய செலவாணி மோசடி செய்கிறார். வணிகவரி, சொத்துவரி, வருமானவரி ஏய்ப்பு செய்கிறார். பொய்க்கணக்கு காட்டுகிறார்! (ஜக்தாத் வரியை முறையாக செலுத்தச் சொல்லும் உலமாக்கள் வணிகவரி, வருமானவரி, சொத்துவரிகளை முறையாகக் கட்டச்சொல்லி பயான் செய்வதில்லையே! ஏன்?)

தொழுகையாளி அரசாங்கம் மானிய விலையிலே தரக்கூடிய பொருட்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்கிறார்! (நிறைய பள்ளிவாசல்களிலே அரசாங்கம் மானிய விலைக்கு தரக்கூடிய கஞ்சி அரிசியை வாங்கி வெளியே விற்றுவிடுகிறார்கள் என்ற தகவலும் உண்டு)

தொழுகையாளி போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுகிறார்!

மேற்சொன்ன மோசடிகளிலே மாட்டிக்கொள்ளும் போது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பிக்கப் பார்க்கிறார்! லஞ்சம் கொடுப்பதை குர்ஆன் தடுக்கவில்லையா?

தொழுகையாளி தன் பிள்ளைக்கு பயண டிக்கெட் வாங்க கண்டக்டரிடம் பொய் சொல்கிறார்!

இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்.

”நீங்கள் சொல்வது மாதிரி மேற்சொன்ன தீமைகளை தடுக்கவில்லையே ஏன்? காரணம் நிறையபேருக்கு மேலே சொல்லப்பட்டவை முதலில் தீமைகள் தானா? என்பதே தெரியவில்லை”.

 

இத்தனையும் சொன்ன பிறகும் நண்பர் மீண்டும் ஆரம்பித்தார்.

 

”பாய் நன்மையை நீங்க ஏவினாலே போதும்; தீமை தன்னால் அழிந்துவிடும். ஓரிடத்திலே இருட்டாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் போக்க அங்கே ஒரு விளக்கை மட்டும் வைத்தாலே போதும். இருள் போய் விடும் இல்லையா? என்று நண்பர் ஒரு உதாரணத்தையும் சொன்னார். (விளக்கை ஏற்றி வைத்தால் மட்டும் போதாது. சில நேரம் லேசாக காற்று வீசினால் கூட அந்த விளக்கொளியும் அனைந்து விடும்.. அந்த இடர்களை தடுக்கத்தான் தடுப்புச் சுவராக அரிக்கேன் விளக்கில் கண்ணாடி பொருத்தப்படுகிறது. தீமையை தடுக்கும்போதுதான் நன்மையை ஏவியதற்கான முழு ரிசல்ட்டையும் பெறமுடியும். – adm)

”சரி பாய்… ஓரிடத்திலே முட்செடியாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்திலே காய்கறிச் செடி நட வேண்டும்… என்ன செய்யனும்? அந்த முட்புதரை அழித்துவிட்டு காய்கறிச் செடிகளை நட வேண்டுமா? அல்லது அந்த முட்புதருக்கு பக்கத்திலே காய்கறிச் செடியை நட்டால் போதுமா? என்றேன்.

”நிச்சயமாக தொழுகை மானகேடான மற்றும் அருவருக்கத்தக்க செயல்களை விட்டும் தடுக்கிறது” குர்ஆன் (29:45) நிச்சயமாக தொழுகை தவறான செய்கைகளைவிட்டும் மனிதனை தடுக்கும் என்றாலும் நம்முடைய தொழுகையின் லட்சணத்தைப் பொருத்தல்லவா அதனுடைய பலாபலன் இருக்கும். அதனால் தான் வல்லோன் அல்லாஹ் அதே குர்ஆனிலே”நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிலே அவரசியம் இருக்க வேண்டும் அவர்கள் நன்மையை ஏவ வேண்டும். தீமையை தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எவர்கள் இதைச் செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்..” (குர்ஆன் 3: 104)

நபிமார்களும் இந்தப் பணியைத்தான் செய்தார்கள். நன்மையை மட்டும் ஏவி இருந்தால், தீமையை தடுக்காமல் இருந்திருந்தால் எந்த நபிக்கும் அடி விழுந்திருக்காது. எந்த நபியும் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த நபிமார்களுடைய வேலையைச் செய்வதாகச் சொல்லும் நீங்கள் எங்கேயாவது அடி வாங்கி இருக்கிறீர்களா? எப்படி வாங்குவீர்கள். நீங்கள் தான் எந்த தீமையையும் தடுப்பதில்லையே!

”ஜிஹாதிலே சிறந்த ஜிஹாது அநியாயக்கார ஆட்சியாளனிடம் அவனது அநியாயத்தை எடுத்துரைப்பதுதான்” என்பது நபிமொழி. இந்த நாட்டிலே எத்தனை எத்தனை அநியாயக்கார ஆட்சியாளர்கள் வந்தார்கள், போனார்கள் இருந்து கொண்டும் இருக்கிறார்கள். யாரிடத்திலாவது ஏதாவது சொல்லி இருப்பீர்களா? நீங்கள் நினைத்தால் எந்தவித விளம்பரமும் இல்லாமல் லட்சக்கணக்கானனோரை திரட்டி விட முடிகிறது. அந்த மக்களை மோசமான ஆட்சியாளர்களுக்கு எதிராக நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீதியிலே என்றைக்காவது பயன்படுத்தியிருக்கிறீர்களா? அப்படி பயன்படுத்தலாம் என்ற சிந்தனையாவது உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் ஓட்டே போடுவதில்லையே! அப்புறம் உங்களிடம் ஜனங்களைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் எங்கே கவலை இருக்கப் போகிறது.

 

கேட்டால் ”எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொள்வான்”. அவனுடைய தீனை மட்டும் உங்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறானா?

 

தீமையை செய்யாமல் மட்டும் இருந்தால் போதாது. அதைத் தடுக்காமல் இருந்தாலும் எல்லாருக்கும் தண்டனையுண்டு என்பதே இறைச்செய்தி. இதே கருத்தை எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான உதாரணம் மூலம் சொன்னார்கள்.

”ஒரு கப்பலிலே கீழ்தளத்தில் கொஞ்சம் பேரும் மேல் தளத்திலே கொஞ்சம் பேரும் பயணம் செய்கிறார்கள். கீழ் தளத்திலே உள்ளவர்கள் கப்பலிலே ஓட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டை விழுந்துவிட்டால் கப்பலிலே தண்ணீர் வந்துவிடும். தண்ணீர் வந்தால் நமக்கென்ன? கீழ்த்தளத்தில் உள்ளவர்கள்தானே மூழ்குவார்கள் என்று மேல்தளத்தில் உள்ளவர்கள் எண்ணினால் நிலைமை என்னவாகும். கீழ்தளம் மூழ்கி, மேல்தளமும் மூழ்கி அப்புறம் கப்பலே மூழ்கிவிடாதா? இந்த கதை தான் இன்று நடக்கிறது.

இந்த சமூகத்துக்கு வரும் கேடும் கெடுதியும் தீமையை தடுக்காததன் விளைவே! வருடம் தோறும் லட்சக்கணக்கிலே மக்கள் புனித ஹஜ்ஜிலே கூடுகிறார்கள். அங்கே துஆக்கள் கபுலாகும் இடங்கள் இருக்கத்தானே செய்கின்றன. அங்கெல்லாம் துஆ கேட்பவர்களில் ஒருத்தர் கூடவா இந்த சமுதாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் அவல நிலையை போக்க துஆ கேட்பதில்லை. யோசிக்க வேண்டும். தீமையை தடுக்க முயற்சி செய்யாதவரை எத்தனைபேர் துஆ கேட்டாலும் சரி எத்தனை ”அபூர்வ துஆ” நடத்தி எத்தனை மணிநேரம் துஆ கேட்டாலும் சரிதான் பலன் பூஜ்ஜியமே!

 

”என்னபாய்! இதெல்லாம் கொலை கொள்ளை அளவுக்கு பெரிய பாரதூரமான விஷயமா? இதைப் போய் பெரிசுப்படுத்தறீங்களே?”

 

ஹஜ்ஜத்துல் விதாவிலே தனது கடைசிப் பேருரையிலே எம்பெருமானார் சொன்னது என்ன தெரியுமா..! நீங்கள் சாத்தானிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவன் உங்களை அவனை வணங்குமாறு செய்துவிடுவான் என்று நான் அஞ்சவில்லை. ஆனால் சின்ன சின்ன பாவங்களை செய்ய வைத்தே உங்களை வழி கொடுப்பான் என்றே நான் அஞ்சுகிறேன்” என்றார்களே. ”இப்போது சொல்லுங்க பாய் சின்ன சின்ன பாவங்களையும் நாம தடுக்கனுமா வேண்டாமா?”.

தீமையை தடுப்பதென்றால் ஆளுக்கொரு வாளையும், கட்டையையும் எடுத்துக்கொண்டு செல்லச் சொல்லவில்லை. அதற்கும் சில வரையரைகளை தந்திருக்கிறது மார்க்கம்.

”தீமையை உங்களுக்கு சக்தி இருந்தால் கரத்தால் தடுங்கள். இல்லையென்றால் வாயால் தடுங்கள். அதற்கும் உங்களுக்குச் சக்தியில்லை என்று சொன்னால் அந்த தீமையை மனதால் வெறுத்து அதைவிட்டும் ஒதுங்கி விடுங்கள்;. இதுதான் ஈமானின் கடைசி நிலை என்றார்கள் எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

உங்களிடம் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் தீமையை மனதால் வெறுத்து ஒதுக்கும் கடைசி நிலையையாவது நாம் கை கொள்ள வேண்டும்.

 

www.nidur.info

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின் சிறப்பும்!

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின் சிறப்பும்!

மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி

 

அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

 

புனிதமான மாதங்களில் ஒரு மாதம்:

 

அல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில் ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.

 

“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 09:36)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

 

“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)

 

மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:

 

1) துல் கஃதா,

2) துல் ஹிஜ்ஜா,

3) முஹர்ரம்,

4) ரஜப்

எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.

உதாரணமாக, ‘ஹராம்’ என்பதற்கு ‘தடுக்கப்பட்டவை’ என்ற பொருளாகும். ‘தக்பீரதுல் இஹ்ராம்’ என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் ‘இஹ்ராமும்’ ஆகும். ‘இஹ்ராம்’ என்பதும் ‘தடுக்கப்பட்வை’ எனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ‘ஹுரும்’ என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ‘ஹுரும்’ என்பது ‘தடுக்கப்பட்டவை’ அல்லது ‘புனிதமானவை’ என்று விளங்க முடியும்.

 

அல்லாஹ் கூறுகின்றான்:

 

“அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும்” (அல்குர்-ஆன் 22:30)

மனிதன் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.

இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாததின் சிறப்புக்களை கீழ் குறிப்பிடும் தகவல்களூடாக அறிந்துகொள்ளலாம்.

 

அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!

முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதம்!

 

அல்லாஹ் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்” (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பின் சிறப்பு!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

 

“ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை “ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு” என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது, இதனால் வாராந்திர நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்திரம் நோற்கக்கூடிய 13,14,15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதேபோன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27.28,29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பைபெற முயலவேண்டும்.

 

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!

 

முஹர்ரம் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும், நபிகளார் (ஸல் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.

குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள்.. மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தொளிவுபடுத்துகின்றது.

 

பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

 

“ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்”. (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தெளபாவாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

 

“வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” (ஆதாரம்: முஸ்லிம்)

ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள்; அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செய்து, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.