நடுநிலை – இஸ்லாம் எளிமையான மற்றும் மிதமான மார்க்கம்

. ‘நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
– 39 -ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
“அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவேன்” என்று நான் கூறுகூதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘நீங்கள் தான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவேன்” என்று கூறியதா என்று கேட்டார்கள். ‘நான் அப்படிச் சொல்லத் தான் செய்தேன்” என்று நான் பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களால் அது முடியாது. எனவே, (சில சமயம்) நோன்பு வையுங்கள். (சில சமயம்) நோன்பை விடுங்கள். (இரவில்) நின்று வணங்குங்கள். தூங்கவும் செய்யுங்கள். மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம் முழுவதும் நோன்பு வைத்ததாகும்” என்று கூறினார்கள். நான், ‘இதை விட அதிக நாள் நோற்பதற்கு எனக்கு சக்தியுண்டு இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘அப்படியென்றால் ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாள்கள் நோன்பைவிட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘அதை விட அதிகத்திற்கு எனக்கு சக்தியுண்டு, இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அப்படியென்றால், ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பைவிட்டு விடுங்கள். அதுதான் (நபி) தாவூதுதின் நோன்பாகும்; அதுதான் நடுநிலையானதாகும்” என்று கூறினார்கள். நான், ‘அதை விடச் சிறந்ததற்கு எனக்கு சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அதை விடச் சிறந்ததேயில்லை” என்று கூறினார்கள்.
3418- .ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)’ என்று கூறினார்கள். மக்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)’ என்று வினவினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘(ஆம்) என்னையும்தான்; அரவணைத்துக் கொண்டால் தவிர’ என்று கூறிவிட்டு, ‘(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைபிடியுங்கள்.) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்’ என்றார்கள்.
6463.-ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

6464-.ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்

Source : http://www.tamililquran.com/

கதீஜா பின்து குவைலித் ரளியல்லாஹு அன்ஹா : எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி

கதீஜா பின்து குவைலித் ரளியல்லாஹு அன்ஹா : எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி

[ கணவர் மீது அன்பு செலுத்துவதிலும் அவருக்கு ஒத்துழைப்பதிலும் அன்னை கதிஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்வு சாதனை மனிதர்களின் வாழ்க்கை துணைவிகளுக்கு சரித்திரம் சொல்லும் ஒரு பாடமாகும். ”எனக்கு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அன்பு வாழ்வாதாரமாக கொடுக்கப் பட்டிருந்தது” என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இன்னீ கத் ருஜிக்து ஹுப்பஹா –ஸஹீஹ் முஸ்லிம் 4464)

அந்த அன்பு எனக்கு கிடைத்த வரம் என்பதே இதன் கருத்து என விரிவுரையாளர் நவவீ கூறுகிறார். ஒரு வரலாற்று நாயகரை – மாபெரிய வாழ்நாள் சாதனையாளரை தன் அன்பால் இறுதிவரைக் கட்டிப்போட்டிருந்த்து கதீஜா அம்மையாரின் சாதனைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தன்னை விட 15 வய்து இளைய ஆண்மகனை விரும்பி சுயமாகத் திருமண்ம் செய்து கொண்ட, உலகைப் புரட்டிப் போட்ட ஒரு புரட்சி வரலாற்றின் சாரதி.

”உலகின் சிறந்த பெண்மணி கதிஜா” என்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கு இன்றைய தலைமுறை பெண்கள் புதிய கண்ணோட்ட்த்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தியாகும். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா மத ரீதியாக அதிக கவனப்படுத்தலுக்குரியவர் என்பதை தாண்டி இன்றை பெண்ணிய தத்துவத்திற்கான ஒரு சரியாள அள்வீடாக அவர் திகழ்வதை அக்கறையுள்ளவர்கள் கவனிக்க வேண்டும்.

இந்திரா காந்தி அரசியலில் செல்வாக்கும் உறுதியும் மிக்க பெண்மணியாக இருந்தார். ஆனால அவர் நல்ல மனவியாக இருந்தாரா என்பது கேள்விக்குரியது. இது போன்ற பலவீனங்கள் இன்றைய புகழ் பெற்ற ஒவ்வொரு பெண்மணியிடமும் உண்டு. அந்த அம்சங்களையும் கணக்கில் கொண்டு கதீஜா அம்மையாரை ஒப்பீடு செய்து பார்த்தால் கதீஜா அம்மையாரின் பெருமையை முழுமையானதாக உணர்வீர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெரு வணிகச் சீமாட்டி யார் என்ற ஒரு தேடல் நடை பெறுமெனில் அம்மையார் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடைய ஒரு பெயர் மட்டுமே அதன் விடையாகக் கிடைக்கக்கூடும்.

கதீஜா அம்மையாரின் சுதந்திரமான அணுகுமுறை ஆச்சரியத்திற்குரியது. ஒரு வகையில் அன்றைய சமூகச் சூழல் அந்த சுதந்திரத்தை அவருக்கு வழங்கியிருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை இன்றைக்குள்ள சில பெண்கள் தங்களியே அதிகம் சுதந்திரம் பெற்றவர்களாக கருதிக் கொள்வதை கதீஜா அம்மையாரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கேலியாகச் சிரிக்கத்தான் தோன்றும்.

ஒரு வெற்றிகரமான பெண்ணியத்தின் குறியீடாக திகழும் கதீஜா பிந்து குவைலித் ரளியல்லாஹு அன்ஹா ஏதோ வரலாற்றில் வாழ்ந்து முடிந்த பழைய பெயர் அல்ல. இன்றைய சூழலில் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும். ஒப்பீடுகள் செய்யப்பட வேண்டும்.

அவரது வெற்றிப்பணிகளின் கனபரிமாணம் அளக்கப் பட வேண்டும். அப்படிச் செய்யப்பட்டால் இன்றைய நவீனப் பெண்மணிகளுக்கு பல புதிய வழிகாட்டுதல்கள் கிடைக்க்கும். வாழ்க்கையைப் பற்றிய தெளிவுகளை பிறக்கும்.] Continue reading