அல்லாஹ்வை அழைக்கும் விதம்

அல்லாஹ்வை அழைக்கும் விதம்

01  என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்டபோது ‘இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் என்று சொல்வீராக’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூபக்ர் அஸ்ஸித்திக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 834) Continue reading

Names of Allah

The most beautiful names belong to Allah: so call on him by them. (7:180)7-180

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள்அவனைப் பிரார்த்தியுங்கள்

Those who believe, and whose hearts find satisfaction in the remembrance of Allah: for without doubt in the remembrance of Allah do hearts find satisfaction. (13:28)

அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வதுகொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க.

தூய்மையாளன்
உண்மையான அரசன்
நிகரற்ற அன்புடையோன்

அளவற்றஅருளாளன்
மிகைத்தவன்
இரட்சிப்பவன்
அபயமளிப்பவன்
சாந்தி அளிப்பவன்
ஒழுங்கு செய்பவன் படைப்பவன் பெருமைக்குரியவன் அடக்கியாள்பவன்
கொடைமிக்கவன் அடக்கி ஆள்பவன் மிக மன்னிப்பவன் உருவமைப்பவன்
கைப்பற்றுபவன் நன்கறிந்தவன் வெற்றியளிப்பவன்

உணவளிப்பவன்
கண்ணியப்படுத்துபவன் உயர்வளிப்பவன் தாழ்த்தக்கூடியவன் விரிவாக அளிப்பவன்
அதிகாரம் புரிபவன் பார்ப்பவன் செவியுறுபவன் இழிவுபடுத்துபவன்
சாந்தமானவன் உள்ளூர அறிபவன் நுட்பமானவன் நீதியாளன்
மிக உயர்ந்தவன் நன்றி அறிபவன் மன்னிப்பவன் மகத்துவமிக்கவன்
விசாரணை செய்பவன் கவனிப்பவன் பாதுகாப்பவன் மிகப்பெரியவன்
அங்கீகரிப்பவன் காவல் புரிபவன் சங்கைமிக்கவன் மகத்துவமிக்கவன்
பெருந்தன்மையானவன் நேசிப்பவன் ஞானமுள்ளவன் விசாலமானவன்
பொறுப்புள்ளவன் உண்மையாளன் சான்று பகர்பவன் மறுமையில் எழுப்புபவன்
புகழுடையவன் உதவி புரிபவன்  ஆற்றலுடையவன் வலிமை மிக்கவன்
உயிரளிப்பவன் மீளவைப்பவன் உற்பத்தி செய்பவன் கணக்கிடுபவன்
உள்ளமையுள்ளவன் என்றும்நிலையானவன் என்றும்உயிரோடிருப்பவன் மரிக்கச் செய்பவன்
தேவையற்றவன் அவன் ஒருவனே தனித்தவன் பெருந்தகை மிக்கவன்
பிற்படுத்துபவன் முற்படுத்துபவன் திறமை பெற்றவன் ஆற்றலுள்ளவன்
அந்தரங்கமானவன் பகிரங்கமானவன் அந்தமுமானவன் ஆதியானவன்
மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் நன்மை புரிபவன் மிக உயர்வானவன் அதிகாரமுள்ளவன்
அரசர்களுக்கு அரசன் இரக்கமுடையவன் மன்னிப்பளிப்பவன் பழி வாங்குபவன்
சீமான்-தேவையற்றவன் ஒன்று சேர்ப்பவன் நீதமாக நடப்பவன் கண்ணியமுடையவன்
சிறப்புடையவன்
பலன் அளிப்பவன் தீங்களிப்பவன் தடை செய்பவன் சீமானாக்குபவன்
நிரந்தரமானவன் புதுமையாக படைப்பவன் நேர்வழி செலுத்துபவன் ஒளி மிக்கவன்
மிகப்பொறுமையாளன் வழிகாட்டுபவன் உரிமையுடைவன்

பிறர் மானம் காப்போம்

01  4  -  9841-பிறர் மானம் காப்போம்

முஹம்மது கைஸான் (தத்பீகி)

மானத்தின் முக்கியத்துவம்

மனிதனின் மானம் வானம் போல் பெரியது மானத்திற்கு முன்னால் மனிதனின் உயிர் மற்றும் உடமைகள் அத்திப்பழத்தின் விதையை விடவும் சிறியவை. மானம் காப்பதும் மரியாதை கேட்பதும் மனிதனின் குருதியில் ஊரிய குணாதிசியங்கள். மானம் இழந்தவன் தன் உயிரை இழந்தான்’ என்பார்கள் நம் முன்னோர்கள்.

மானம் மலையேரும் போது மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான் அல்லது சமூகத்தை விட்டும் ஓடி ஒழிந்து கொள்கிறான். தன்மானம்; காப்பதற்காக தன் சொத்து சுகங்களைக்கூட தியாகம் செய்யும் அளவுக்கு மனிதன் தன்மானத்தை பெரும் செல்வமாக மதிக்கின்றான்.

ஆதி மனிதர்களான ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரும் சுவர்க்கத்தில் தங்க வைக்கப்பட்ட போது இறை கட்டலையை மீறினார்கள் அதன் விலைவால் அவர்களின் வெட்கத்தலங்கள் தெரிந்தன. உடனே இருவறும் பொங்கி எழுந்து நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விலைந்ததாக குர்அன் கூறுகின்றது.

”அவர்களிருவரும் அம்மரத்தினை சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்கு தெரிந்தன. அவ்விருவரும் சுவர்க்கத்தின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்.” (அல்குர்ஆன்: 7:22)

அவ்வாறே அறியாமைக்காலத்து அறப்புக்கள் கூட தங்கள் மானத்தை பெரும் செல்வமாக மதித்துள்ளனர். அறியாமைக்கால புலவர் ஒருவர் தன் மானத்தின் மகிமையை கவிதையில் வடித்துள்ள விதத்தைப் பாருங்கள்.!

மானம் அனைத்திலும் உயர்வானது! செல்வம் வைடூரியம் ஆகியவற்றை விடவும் விலை மதிப்பற்றது. மானம் இல்லாத செல்லவம் சுபிட்ச்சம் அற்றது.என் செல்வத்தால் என் மானத்தைக் காப்பேன். ஒரு போதும் அதை நான் கலங்கப்படுத்த மாட்டேன். என் செல்வம் பறிபோனால் தந்திரத்தை கையாண்டு அதை திரட்டுவேன். என் மானம் மலையேறினால் தந்திரங்களால் அதை காக்க முடியாது. மானம் கெட்ட பிறகு என் செல்வத்தால் என்ன பலன் .இல்லை உயிர் வாழ்ந்தே என்ன பலன்.

இருண்ட வாழ்க்கை வாழ்ந்த அந்த அறபியர்கள் கூட தங்கள் மானத்தை பெரும் செல்வமாக மதித்துள்ளார்கள் என்பதை இது உணர்துகின்றது.

இஸ்லாத்தின் மூன்றாம் கலீபா உத்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னைப் பற்றி குறிப்பிடும் போது;

அல்லாஹ் மீதானையாக நான் அறியாமைக்காலத்திலோ இஸ்லாத்தை ஏற்ற பின்போ விபச்சாரத்தை ஏரெடுத்தும் பார்த்தில்லை எனக்குறிப்பிடுகிறார்.

மானம் என்பது காக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை அன்னார் உணர்ந்த காரணத்தினால் மானத்தை காவு கொள்ளும் தீய செயல்களை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார்கள்.

எனவே மான உணர்வு என்பது மனித இனத்துடன் ஒட்டிப் பிறந்த பன்பாகும். நிற, குல, இன, மொழி மத பேதங்களைத் தாண்டி மனித ரத்தங்களில் ஊறிப் போய் உள்ள இயற்க்கை உணர்வே மான உணர்வாகும்.

எனவேதான் இஸ்லாம் மனிதனின் உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பளித்து மனிதனின் மானத்தை உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கின்றது. மனிதனின் கற்புக்கும் உயிருக்கும் உடமைக்கும் மான மரியாதைக்கும் இஸ்லாம் பல் வேறு வழிகளில் பாதுகாப்பு அரணை வழங்குகியுள்ளது. இஸ்லாம் மனிதனின் கண்னியத்தை காத்ததைப் போன்று உலகச்சமயங்களில் வேறு எந்தச்சமயங்களும் அவனது கண்னியத்தை காத்து அவனது சாந்தமான வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்கவில்லை.

புனித மிக்க மானமும் புனித மிக்க கஃபாவும் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது, தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:

‘இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர் உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும. (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 1652)

மனிதனின் கண்னியத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரத்தின் புனிதத்தன்மைக்கு இனையாக உவமித்திருப்பது மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.

இறை ஆலையமான கஃபாவையும் அதைச்சூலவுள்ள புனிதப்பகுதியையும் மதிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே தன் சகோதர முஸ்லிமின் கண்ணியத்தை பேணுவதும் கடமையாகும் என்பதை நபிகளாரின் உவமை உணர்த்துகின்றது. Continue reading

கடலைப் பிளந்த கைத்தடி! (ஆஷுரா தினக்கவிதை)

ஆஷுரா!
அன்று இந்நாளில்
அழித்தொழிக்கப்பட்ட ஆணவம்
அறிவித்தபடியிருக்கிறது என்றும்
வல்லோனின் வல்லமையை!
சடலமான பொய்யின்
சாட்சியில் பொய்யில்லை
உண்மையின் உயர்வினை
உரத்து உரைக்கிறது
கால வெளியில்
காதிருப்போர் கேட்கக் கடவர்.

“உயிருடனும் உணர்வுடனும்
உண்மைக்கு மாறாய் வாழ்வோர்
சவமான பின்பு சாட்சியாகக் கூடும்
சரித்திரத்தின் அகழ்வில்!”

கடலைப் பிளந்த
கைத்தடியின் கூற்று
காதுகளில் ஒலித்தபடி…
“கடலினும் பெரிது கருணை
காருண்யனை நம்பினால்
கைவிடப்படமாட்டோம்”

கடலளவே உகுத்தாலும்
காலம் கடந்த கண்ணீர்
கழுவுவதில்லை கறைகளை
மறுக்கப்பட்ட மன்னிப்பு
மனிதருக்குப் பாடமாகிறது!

 
கவிதை: சகோதரர் பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

நபிமார்கள் கேட்ட துஆக்கள்

நபிமார்கள் கேட்ட துஆக்கள்01. துஆக்கள் ஏற்கப்பட

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ )

“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 2: 127-128)

Continue reading

ஸஜ்தாவின் சிறப்பு

ஸஜ்தாவின் சிறப்பு

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறியதாவது: மக்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) ‘அல்லாஹ்வின் தூதரே! நாஙகள் எஙகள் இறைவனைக் காண்போமா?’ என்று வினவினர்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பௌர்ணமி இரவில் கீழே மேகம் சூழாத (வானில்) சந்திரனைக் காண்பதில் நீஙகள் ஐயம்கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள்.

மக்கள்  ‘இல்லை (ஐயம் கொள்ள மாட்டோம்) அல்லாஹ்வின் தூதரே!’ என்றார்கள்.

மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘கீழே மேகம் சூழாத சூரியனைக் காண்பதில் நீஙகள் ஐயம்கொள்வீர்களா?’ எனக் கேட்டார்கள்.

அதற்கும் மக்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தனர்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், ‘இவ்வாறுதான் உறுதியாக நீஙகள் இறைவனைக் காண்பீர்கள்,’ என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்:

”மறுமை நாளில் மக்கள் அனைவரும் ஒன்று குவிக்கப்படுவார்கள். அப்போது, ‘(உலகத்தில்) யார் எதனை வணஙகிக் கொண்டிருந்தார்களோ அதனைப் பின்பற்றிச் செல்லட்டும்’ என்பான் (இறவைன்).

ஆகவே சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறு சிலர் தீய சக்தி(களான சாத்தான்கள்/ சிலைகள்/ மந்திரவாதிகள் போன்ற வழிகேடர்)களைப் பின்பற்றிச் செல்வர். இறுதியில் (எனது) இந்த சமுதாயம் மட்டும் தஙகளிடையே நயவஞ்சகர்கள் இருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும்.

அப்போது வலிவும் மான்பும் உடைய இறைவன் (அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, ‘நான் உஙகள் இறைவன்’ என்பான். உடனே அவர்கள் ‘எஙகள் இறைவன் எஙகளிடம் வரும்வரை நாஙகள் இஙகேயே இருப்போம். எஙகள் இறைவன் எஙகளிடம் வந்தால் அவனை நாஙகள் அறிந்துகொள்வோம்’ என்று கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, ‘நானே உஙகள் இறைவன்’ என்பான். அப்போது அவர்கள், ‘நீ எஙகள் இறைவன்தான்’ என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான்.

நரகத்தின் மேற்பரப்பில் பாலம் அமைக்கப்படும். (இறைத்தூதர்கள். தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். நானே அ(ந்தப் பாலத்)தை முதலாவதாகக் கடப்பவன் ஆவேன். அன்றைய தினத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறுயாரும் பேசமாட்டார்கள். அன்றைய தினத்தில், ‘இறைவா! காப்பாற்று! காப்பாற்று!, என்பதே இறைத்தூதர்களின் பிரார்த்தனையாகும்.’

தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அந்நரகத்தி(ன் பாலத்தி)ல் கொக்கிகள் அமைந்திருக்கும். அவை (ஊமத்தஙகாயின் முள்வடிவில்) ,சஅதான், செடியின் முள்ளைப் போன்றிருக்கும்,, என்று கூறிவிட்டு, ‘சஅதான், செடியின் முள்ளை நீஙகள் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள்.

மக்கள், ‘ஆம்(பார்த்திருக்கிறோம்)’ என்று பதிலளித்தார்கள்.

தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்: ‘அந்தக் கொக்கிகள் சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருந்தாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

அப்போது அந்த கொக்கி மக்களை அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப பற்றிப் பிடிக்கும். அவர்களிடம் தம் (தீய) செயல்களை முன்னிட்டு பேரழிவுக்கு உள்ளாபவர்களும் உண்டு. (அந்தப் பாலத்தில்) தட்டுத்தடுமாறிய பின் தப்புபவர்களும் உண்டு.

இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்களில் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும்போது வானவர்களிடம், அல்லாஹ்வை வணஙகிக் கொண்டிருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள்.

சஜ்தாச் செய்த அடையாளஙகளை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள்.

சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளஙகளைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே (அல்லாஹ்வை வணஙகியவர்கள்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த(தால் ஏற்பட்ட) வடுக்களைத் தவிர ஆதமின் மைந்த(னான மனித)ர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும்.

இந்த நிலையில் அவர்கள் கருகிப் போனநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீரை ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள். பின்னர் அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிப்பான்.

இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி, இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது’ என்று கூறுவான்.

அப்போது அல்லாஹ், ‘( உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப்பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?’ என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், ‘இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறுறெதையும் கேட்கமாட்டேன்)’ என்பான்.

அந்தமனிதன் அல்லாஹ்விடம் தான் நாடிய உறுதிமொழியையும் வாக்குறுதிகளையும் வழஙகுவான். அல்லாஹ் நரகத்தைவிட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக்கொண்டு அல்லாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான்.

பிறகு ‘இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்லவைப்பாயாக!” என்று கேட்பான். அதற்கு இறைவன்,’ முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே’ என்று கேட்பான்.

அதற்கு அம்மனிதன், ‘இறைவா! என்னை உன் படைப்புக்களிலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக்கூடாது!’ என்று கூறுவான்.

அதற்கு இறைவன்; ‘(நீ கேட்டது) உனக்கு வழஙகப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா” என்பான்.

அம்மனிதன், ‘இல்லை’ உன் கண்ணியத்தின் மீதாணையாக! இஃதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டேன்” என்பான். இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான்.

உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்லவைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான். அதிலுள்ள செழுமையையும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான்.

பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன், ”இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப்பாயாக!,,’ என்று கூறுவான்.

அதற்கு உன்னதனாகிய அல்லாஹ், ‘ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய் முன்பு வழஙகப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே!’ என்று கேட்பான்.

அதற்கு அம்மனிதன், ‘இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நற்கதியற்றவனாய் ஆக்கிவிடாதே!’ என்பான். இம்மனிதனின் நிலை கண்டு சிரிப்பான்.

பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், ‘நீ ஆசைப்படுவதைக்கேள்!’ என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான்.

இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப் பெறும்போது (அவனிடம்) இறைவன், ‘இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு!’ என்று சொல்லிக் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும்போது உன்னதனாகிய அல்லாஹ் ‘உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடஙகும் உண்டு” என்பான்.

இதன் அறிவிப்பாளரான அபூ சயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் தமக்கு இதை அறிவித்த அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்களிடம், ”உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடஙகும் உண்டு, என்றா அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள்!’ என்று கேட்டார்கள்.

அதற்கு அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள், ”நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடமிருந்து, ”உனக்கு இதுவும் உண்டு. இதுபோன்று இன்னொரு மடஙகும் உண்டு, என்றே இறைவன் கூறியதாகவே மனனமிட்டேன்” என்றார்கள்.

அதற்கு அபூ சயீத் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள், ”இதுவும் உண்டு. இதுபோன்று பத்து மடஙகும் உண்டு, என்றே நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

[ ஸஹீஹுல் புகாரி, பாகம்:1 அத்தியாயம்: 10 – பாங்கு, பாடம்: 129, ஹதீஸ் எண்: 0806 (ஸஜ்தாவின் சிறப்பு.)]