பிறர் மானம் காப்போம்

01  4  -  9841-பிறர் மானம் காப்போம்

முஹம்மது கைஸான் (தத்பீகி)

மானத்தின் முக்கியத்துவம்

மனிதனின் மானம் வானம் போல் பெரியது மானத்திற்கு முன்னால் மனிதனின் உயிர் மற்றும் உடமைகள் அத்திப்பழத்தின் விதையை விடவும் சிறியவை. மானம் காப்பதும் மரியாதை கேட்பதும் மனிதனின் குருதியில் ஊரிய குணாதிசியங்கள். மானம் இழந்தவன் தன் உயிரை இழந்தான்’ என்பார்கள் நம் முன்னோர்கள்.

மானம் மலையேரும் போது மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான் அல்லது சமூகத்தை விட்டும் ஓடி ஒழிந்து கொள்கிறான். தன்மானம்; காப்பதற்காக தன் சொத்து சுகங்களைக்கூட தியாகம் செய்யும் அளவுக்கு மனிதன் தன்மானத்தை பெரும் செல்வமாக மதிக்கின்றான்.

ஆதி மனிதர்களான ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரும் சுவர்க்கத்தில் தங்க வைக்கப்பட்ட போது இறை கட்டலையை மீறினார்கள் அதன் விலைவால் அவர்களின் வெட்கத்தலங்கள் தெரிந்தன. உடனே இருவறும் பொங்கி எழுந்து நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விலைந்ததாக குர்அன் கூறுகின்றது.

”அவர்களிருவரும் அம்மரத்தினை சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்கு தெரிந்தன. அவ்விருவரும் சுவர்க்கத்தின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்.” (அல்குர்ஆன்: 7:22)

அவ்வாறே அறியாமைக்காலத்து அறப்புக்கள் கூட தங்கள் மானத்தை பெரும் செல்வமாக மதித்துள்ளனர். அறியாமைக்கால புலவர் ஒருவர் தன் மானத்தின் மகிமையை கவிதையில் வடித்துள்ள விதத்தைப் பாருங்கள்.!

மானம் அனைத்திலும் உயர்வானது! செல்வம் வைடூரியம் ஆகியவற்றை விடவும் விலை மதிப்பற்றது. மானம் இல்லாத செல்லவம் சுபிட்ச்சம் அற்றது.என் செல்வத்தால் என் மானத்தைக் காப்பேன். ஒரு போதும் அதை நான் கலங்கப்படுத்த மாட்டேன். என் செல்வம் பறிபோனால் தந்திரத்தை கையாண்டு அதை திரட்டுவேன். என் மானம் மலையேறினால் தந்திரங்களால் அதை காக்க முடியாது. மானம் கெட்ட பிறகு என் செல்வத்தால் என்ன பலன் .இல்லை உயிர் வாழ்ந்தே என்ன பலன்.

இருண்ட வாழ்க்கை வாழ்ந்த அந்த அறபியர்கள் கூட தங்கள் மானத்தை பெரும் செல்வமாக மதித்துள்ளார்கள் என்பதை இது உணர்துகின்றது.

இஸ்லாத்தின் மூன்றாம் கலீபா உத்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னைப் பற்றி குறிப்பிடும் போது;

அல்லாஹ் மீதானையாக நான் அறியாமைக்காலத்திலோ இஸ்லாத்தை ஏற்ற பின்போ விபச்சாரத்தை ஏரெடுத்தும் பார்த்தில்லை எனக்குறிப்பிடுகிறார்.

மானம் என்பது காக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை அன்னார் உணர்ந்த காரணத்தினால் மானத்தை காவு கொள்ளும் தீய செயல்களை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார்கள்.

எனவே மான உணர்வு என்பது மனித இனத்துடன் ஒட்டிப் பிறந்த பன்பாகும். நிற, குல, இன, மொழி மத பேதங்களைத் தாண்டி மனித ரத்தங்களில் ஊறிப் போய் உள்ள இயற்க்கை உணர்வே மான உணர்வாகும்.

எனவேதான் இஸ்லாம் மனிதனின் உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பளித்து மனிதனின் மானத்தை உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கின்றது. மனிதனின் கற்புக்கும் உயிருக்கும் உடமைக்கும் மான மரியாதைக்கும் இஸ்லாம் பல் வேறு வழிகளில் பாதுகாப்பு அரணை வழங்குகியுள்ளது. இஸ்லாம் மனிதனின் கண்னியத்தை காத்ததைப் போன்று உலகச்சமயங்களில் வேறு எந்தச்சமயங்களும் அவனது கண்னியத்தை காத்து அவனது சாந்தமான வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்கவில்லை.

புனித மிக்க மானமும் புனித மிக்க கஃபாவும் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது, தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:

‘இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர் உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும. (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 1652)

மனிதனின் கண்னியத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரத்தின் புனிதத்தன்மைக்கு இனையாக உவமித்திருப்பது மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.

இறை ஆலையமான கஃபாவையும் அதைச்சூலவுள்ள புனிதப்பகுதியையும் மதிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே தன் சகோதர முஸ்லிமின் கண்ணியத்தை பேணுவதும் கடமையாகும் என்பதை நபிகளாரின் உவமை உணர்த்துகின்றது.

மக்காவுக்குச் செல்லும் முஸ்லிம்கள் ஒரே விதமான வெள்ளை ஆடை தரித்து, தங்களுக்கிடையே எந்த வித நிற, இன மொழி பேதத்தையும் ஏற்படுத்தாமல் கஃபாவை வலம் வருகின்றனர்.

சண்டை சச்சறவு இல்லாமல் பயிர் பச்சைகளைக் கிள்ளாமல் உயிர்ப் பிராணிகளை வேட்டையாடாமல் அதன் புனிதத்துவத்தை மதிக்கின்றனர்.

இவ்வாறு மக்கா நகரத்தின் புனிதத் தன்மையை மதிக்கும் கணிசமான முஸ்லிம்கள், தன் சகோதர முஸ்லிமின் மானம், மரியாதை விடயத்தில் அக்கரை செலுத்துவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் தூங்கும் போது கிப்லாவை நோக்கி கால்களைக் கூட நீட்டக் கூடாது(?) என எள்ளை கடந்து அதன் புனிதத்தை மதிக்கும் முஸ்லிம்கள் தன் சகோதர முஸ்லிமின் மானம் மரியாதைவிடயத்தில் கால் தூசு அளவு கூட அக்கறை செலுத்துவதில்லை.

காரணம் மக்கா நகரத்தின் புனிதத்தை உணர்ந்த இவர்கள், மனிதனின் கண்ணியம் எவ்வளவு புனிதமானது என்பதை உணரவில்லை. அல்லது அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை.

ஒரு முஸ்லிமின் கண்ணியத்திலும் மானம் மரியாதையிலும் அத்து மீறுவது மக்கா நகரத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்கு ஈடாகும் என்பது இந்த நபி மொழியின் சாறமாகும்.

எனவே, இதயத்தில் ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் தனது சகோதர முஸ்லிமின் மான மரியாதையில் விளையாடத் துணிய மாட்டான்.

மானம் உயிரை விட புனிதமானது :

யார் தன் பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன்னைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் மார்க்கத்திற்காக கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். ‘என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பர: ஸஈத் இப்னு சைத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : திர்மிதி 4772, நஸாஈ 4095)

இஸ்லாம் எந்தளவு மனிதனின் மானத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதற்கு இந்த நபி மொழி சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒரு முஸ்லிம் தன்னுடைய மானம்மரியாதையை தன் இந்நுயிரை விட மேலாக மதிக்க வேண்டும்.

ஒரு முஃமின் எந்நிலையிலும் தன் மானத்தை இழந்து விடக்கூடாது. தன் மானம் பறிபோக நேறிட்டால் அதற்காக சண்டையிட்டாவது தன் கண்ணியத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். அந்தச்சண்டையில் அவர் கொள்ளப்பட்டாலும் சரிதான்.அவருக்கு ஷஹீதின் நன்மை கிடைக்கும் என இஸ்லாம் கூருகின்றது. ஒரு மனிதனின் மானத்தில் கை வைப்பது அவனை கொலை செய்ததற்கு நிகரான குற்றம் என்பதை இந்த நபி மொழி உணர்த்துகின்றது.

இதிலிருந்து மானமிழந்து மறியாதையற்று நடைப்பினமாக வாழ்வதை விட கண்னியத்தோடு மாழ்வதயே இஸ்லாம் வரவேற்கின்றது என்பதை அறியலாம்.

மானத்தில் கை வைப்பது கொலைக்கு நிகரான குற்றம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள்.கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார்.அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ அவருக்குத் துரோகமிழைக்கவோஅவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்மைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக் குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்றவரின் உயிர் பொருள் மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.

இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 5010)

ஒரு முஸ்லிமின் உயிரை கொல்வது எவ்வளவு குற்றமோ அதே அளவு குற்றத்தை நபிகளார் மான,மரியாதையை கெடுக்கும் விவகாரத்திற்கும் கொடுத்துள் ளார்கள்.

அகபாவில் ஓர் உடன்படிக்கை

மனிதனின் கன்னியத்திற்கு இஸ்லாம் எந்தளவு கவனம் செலுத்தியுள்ளது என்பதற்கு அகபாவில் நடந்த உடன்படிக்கை சிறந்த சான்றாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரில் ஏகத்துவப்பிரச்சாரத்தை முடுக்கி விட்டதினால் பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும் ஆளானார்கள் தன் தாய் நாட்டை துறக்குமளவு சோதனைகள் பல அவரைச்சூள்ந்தன.

இந்த நிலையில் மதீனாலிலிருந்து மக்காவுக்கு வருகை தந்த சில மதீனா வாசிகள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மதீனாவில் அடைக்கலம் தருவதாக வாக்களித்தனர்.இதை யொட்டி அகபா எனும் பல்லத்தாக்கில் அவர்கள் இரகசியமாக அண்ணலாரைச் சந்தித்து அவரின் திருக்கரத்தில் சத்தியப் பிரமாணம் செய்து இஸ்லாத்தை ஏற்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த முக்கியமான நிகழ்ச்சியில் முக்கியமான சில ஒப்பந்தங்கள் எடுக்கப்பட்டன.அந்த ஒப்பந்தங்களில் மனிதனின் மானம்மரியாதை குறித்தும் பேசப்பட்டது உயிருக்கு ஆபத்தான இக்கட்டான நேரத்தில் கூட நபிகளார் மனிதனின் மானம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்கள் என்றால் மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.

இதை புகாரியில் பதிவாகியுள்ள பின்வரும் செய்தி உணர்த்துகின்றது

பத்ருப்போரில் கலந்து கொண்டவரும் இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர் களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும்இ திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட் டீர்கள் என்றும் உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும்இ நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும்இ எந்த நல்ல காரியத் திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்ற சொன்னார்கள்.உடனே நாங்கள் அவற்றுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். (பார்க்க: புஹாரி :18) 

மானம் காத்த மா நபி

இன்னும் சொல்லப் போனால் மாஇஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் விபச்சாரக் குற்றத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொண்டு அதற்குரிய தண்டனையை வழங்கக் கோரிய மூன்று சந்தர்ப்பங்கிலும் அவரின் மானத்தின் புனிதம் கருதி அவரின் இருண்ட விவகாரத்தை வெளிச்சப்படுத்தாமல் அவரை தண்டிக்காது திருப்பி அனுப்பிவைத்தார்கள் நபிகள் நாயகம்.நான்காவது தடைவ அவரே முன் வந்து அதற்குரிய தண்டனையைப் பெற்று இவ்வுலகிலேயே தன்னை பரிசுத்தப்படுத்திக் கொண்டார். (பார்க்க : அபூ தாவுத் : 4421)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முஃமினின் மானத்தை எனதளவு புனிதமானதாக கருதியுள்ளார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த எடுத்துக் காட்டாகும்.இது போன்று இன்னும் பல சம்பவங்கள் நபிகளாரின் காலத்தில் நடந்தன என்பதற்க்கு பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.

மானத்தைக் காக்கும் இறைச்சட்டம்

இஸ்லாம் மனிதனின் மானத்திற்கும் மறியாதைக்கும் அளித்துள்ள முக்கியத்துவத்தை அறிய வேண்டுமெனில் அவதூறுக் குற்றத்திற்கு இஸ்லாம் வழங்கும் கடுமையான தண்டனையை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் மானம் மரியாதயை சிதைக்கக்கூடிய காரியங்களில் அவதூறும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

ஓர் ஆண் மீது அவதூறு எனும் களங்கத்தைச் சுமத்தினால் அது நாளடைவில் மறைந்து விடும்.காரணம் சமூகம் அதை பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

ஆனால் ஒரு பெண் மீது இக்களங்கம் சுமத்தப்பட்டால் அவள் மரணித்து மண்ணோடு மண்ணாகப் போனாலும் கூட அது நிணைவு கூறப்படுவதுண்டு.

ஓர் அபலைப் பெண் மீது கற்பில்லாதவள் என்ற ஒரு பழியைப் போட்டாலே போதுமானது. அன்று முதல் அவளின் நிம்மதி அனைத்தும் அழிந்து அவளின் வாழ்க்கையே பாழாகி விடும் பிறருடைய குத்தலான பார்வைக்கு இலக்காகி தினமும் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலையும் ஏற்படும்.

இதை உணர்ந்த இஸ்லாம் இரும்புத்திரை போல் இருக்கமான சட்டத்தைப் போற்று பெண்களின் மானம் மரியாதை விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது.

கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! பின்னர் அவர்களின் சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்’ (அல்குர்ஆன் 24:4)

இந்த இறைச்சட்டம் இறுக்கமான சட்டமாக இருப்பதால் இதை சற்று விரிவாகவே நாம் கான்போம். திருமணமாகாத ஆணோ பெண்னோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமிய குற்றவியல் தண்டனைசச் சட்டங்களில் ஒன்றாகும் இதை பின்வரும் இறை வசனம் உணர்த்துகிறது.

விபச்சாரம் புரிந்த பெண் விபச்சாரம் புரிந்த ஆண் இருவருக்கும் நூறு கசையடி கொடுங்கள்! மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும்இ இறுதிநாளின் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால்இஅல்லாஹ்வின் சட்டத்தை நிறை வேற்றுவதில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்;! இன்னும் அவ்விருவரின் வேதனையையும் (படிப்பினை பெறுவதற்காகவும் சாட்சியாகவும்) மூஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்’ (அல்குர்ஆன் 24.2)

திருமணமான ஆணோ பெண்னோ விபச்சாரம் செய்தால் அவ்விருவரையும் சாகும் வரை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று இஸ்லாமிய தண்டனைச் சட்டம் இயம்புகிறது இதை பின்வரும் நபி மொழியில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் என்றும் என்னை அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறிய முஸ்லிமை மூன்று காரணங்களுக்காக அன்றி கொலை செய்வது ஆகுமானதல்ல.

1. திருமணமான பின்பும் விபச்சாரம் செய்தல்

2. ஒரு (மனித) உயிரை கொலை செய்தல்

3. இஸ்லாத்தை விட்டு விலகி முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்¥த் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி)

விபச்சாரம் என்பது எவ்வளவு பெரிய வன் குற்றம் என்பதை அறிய அதற்கு இஸ்லாம் வழங்கும் கடுமையான தண்டனையைப் பார்த்தாலே போதுமானது.எனினும் ஒருவர் கற்பொழுக்கமுள்ள ஆணையோ பெண்னையோ களங்கப்படுத்தவோ கேவலப்படுத்தவோ பழிவாங்கவோ நினைத்தால் இப்பழியை அவர்கள் மீது போட்டு காரியத்தை இலகுவாக சாதித்து விடலாம். அவ்வாறு ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற்கு இஸ்லாம் இரும்புத்திரை போல் இறுக்கமான சட்டத்தைப் போற்று மனிதனின் மானத்தைக் காக்கும் கேடயமாக இந்த நான்கு சாட்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்லாம் ஒரு மனிதனின் மானத்தை எந்தளவு புனிதமாக மதிக்கின்றதென்றால் விபச்சாரம் செய்ததாக ஒருவர் சாட்சி சொன்னாலும் இருவர் சாட்சி சொன்னாலும் மூவர் சாட்சி சொன்னாலும் சொன்னவர்களுக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும் நான்குபேரின் சாட்சியையே இஸ்லாமிய குற்றவியல் சட்டம் ஏற்றுக் கொள்ளும். அந்நான்கு பேரில் ஒருவரின் கண்னில் பார்வை குறைபாடு இருந்தாலும் அவர்களின் சாட்ச்சி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்கின்ற அளவிற்கு ஒருவரின் மானத்தை இஸ்லாம் புனிதமானதாக மதிக்கின்றது. விபச்சாரக் காட்சியை கண்னாரக் கண்டாலும் கூட அதை வெளியே சொல்லக்கூடாது என மார்க்கம் கண்டிப்பான கட்டலை போட்டும்; வீணான சந்தேகங்களையும் யூகங்களையும் வைத்து அவதூருகளை அள்ளி வீசுபவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும்.

source: www.kaisanriyadi.blogspot.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s