குடும்பத்தில் அமைதி

Image

குடும்பத்தில் அமைதி

பெரும்பாலான குடும்பத்தில் கணவன் மனைவி என்ற இருபாலரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தான்தோன்றித் தனமாக நடப்பதும், கணவனின் தியாகத்தையும் மனைவியின் தன்னலமற்ற சேவையயை போற்றாமல் இருப்பதே பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

அந்த பிரச்சனைகளின் மைய வடிவமாக குழந்தை வளர்ப்பு என்பது கேள்விக் குறியான ஒன்றாகிவிடுகின்றது. நல்ல கணவன் மனைவியாக வாழ மறுக்கும் தம்பதியினர் குடும்பம் என்னும் பல்கலைகழகத்தை எப்படி வழி நடத்தமுடியும்?

இன்றைய பெரும்பான்மையான சமுதாய இன்னலுக்கு என்றால் யாராவது மறுக்கத்தான் முடியுமா? விதை ஒன்று போட்டால் சுரா ஒன்றா முளைக்கும்? இன்றைய வளரும் பிள்ளைகளின் உதாரண புருஷர்கள் தாய் தந்தை தான்.]

சீர்திருத்தவாதிகள் என்பார்கள், அல்லது சிந்தனைவாதி என்பார்கள், ஆனால் எப்படிப்பட்ட சீர்த்திருத்தவாதி என்ற கேள்வி எழுகிறது?

சிந்தனையும் செயலும் சீர்த்திருத்தம் பெற்று இருக்கிறதா?

தன்னையும் தன் சார்ந்த எண்ணங்களையும் சீர்த்திருத்தி சிந்தனைகளை கூர்மையாக்கி இந்த சமுதாயத்திற்கு எருவாகும் மனிதன் எங்கே?

சீர்த்திருத்தமும் சிந்தனையும் தன்னை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு இயக்க நிலைக்கு மேன்பட்ட அந்த சீர்பெற்ற மனிதன் தன்னை ஒழுங்கு படுத்தவும் தன்சார்ந்த குடும்பத்தையும் ஒழுக்க நெறியில் சரியான பகுப்பு பாதையில் வழி நடத்தும் திறன் பெற்றவனா என்பதை இங்கு கூர்ந்து கவணிக்க தக்கது.

ஊருக்கு உபதேசம் செய்யும் மாந்தர் பெருமக்கள் தன் குடும்பத்தின் அமைதிக்காக என்ன செய்கின்றான்?

வாழ்க்கை கலை என்பது ஒரு கருங்கல் போன்றது. கருங்கல்லிலே நமக்கு தெரியாமல் அழகிய சிலை மறைந்திருப்பது போன்று. நமது வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு சிற்பியின் திறமையினால் அழகிய சிலை வடிவம் பெறுவது போல் நமது வாழ்க்கையிலும் துன்பத்தை கழித்து இன்பம் என்னும் அழகிய வாழ்வை பெறுவது நமது கடமை அன்றோ?

குடும்ப அமைதிக்கும் குடும்ப உறவுக்கும், பெற்ற மக்கள் செல்வங்களின் மேன்மைக்கும் அவர்களின் ஒழுக்க நெறிக்கும் கணவன் மனைவியின் பங்கு எவ்வளவு முக்கியம்?

பல குடும்ப பிரச்சனைகளில் போராடிக் கொண்டிருக்கும் நமது இந்திய சமுதாயம் இன்று பிரச்சனைகளின் மையமாக உருவேடுத்திருப்பதற்கு காரணம் குடும்பத்தில் அமைதி இன்மையே. பேசித் தீர்க்க வேண்டிய பல விடயங்கள் பூதகரமான பிரச்சனைகளாக மாறிப்போனதற்கு விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாததே. நமது இளையோரிடம் ஒழுக்க நெறியும் சுய மரியாதையும் இல்லாமல் போனதற்கும் குடும்பத்தில் அமைதி இன்மையே.

நேற்றைய மதிய வேளையில் பூச்சோங் otk வட்டாரத்தில் உள்ள ஒரு வங்கிக்கு ஒரு வேலையாக சென்றேன். பக்கதில் ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்ததை அதிர்ச்சியோடும் திகைப்புடன் நோக்கவேண்டி இருந்தது. ஒரு ஆண் மாணவரும் ஒரு பெண் மாணவியும் வாடாப்போடா வாடிப் போடி என்று சகஜாமாக பேசுவது எனக்குள் என்னமோ செய்தது . சமுதாயம் ஏன் இப்படி தரம் இழந்துக் கொண்டிருக்கிறது.? இதற்கு யார் பொறுப்பு?

பெரும்பாலான குடும்பத்தில் கணவன் மனைவி என்ற இருபாலரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தான்தோன்றித் தனமாக நடப்பதும், கணவனின் தியாகத்தையும் மனைவியின் தன்னலமற்ற சேவையயை போற்றாமல் இருபதே பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. அந்த பிரச்சனைகளின் மைய வடிவமாக குழந்தை வளர்ப்பு என்பது கேள்விக் குறியான ஒன்றாகிவிடுகின்றது. நல்ல கணவன் மனைவியாக வாழ மறுக்கும் தம்பதியினர் குடும்பம் என்னும் பல்கலைகழகத்தை எப்படி வழி நடத்தமுடியும்?

இன்றைய பெரும்பான்மையான சமுதாய இன்னலுக்கு பெற்றோரின் கடமை தவறிய வளர்ப்பு முறை என்றால் யாராவது மறுக்கத்தான் முடியுமா? விதை ஒன்று போட்டால் சூரா ஒன்றா முளைக்கும்? தாய் தந்தை அல்லது கணவன் மனைவி வினைச்செயல் பிள்ளைகளின் உதாரணத்திற்குறிய செயலாகத்தான் இருக்கும். இன்றைய வளரும் பிள்ளைகளின் உதாரண புருஷர்கள் தாய் தந்தை தான்.

கணவன் மனைவி உறவு என்பது ஒரு அற்புதமான உறவு. தம்பதிகள் இனைந்து ஒன்று சேர முடிவுகள் எடுத்து குடும்பத்தை வழி நடத்தினால் சிறந்ததோரு உதாரண குடும்பங்களை உருவாக்க முடியும். ஒரு கணவனின் தன்னில் பாதிதான் மனைவி. தன்+பாதி என்னும் தமிழ் சொல்லின் விரிவுதான் தம்பதிகளாக உருமாறியதில் வியப்பு ஒன்றும் இல்லை. குடும்பம் என்றால் கணவன் மனைவிக்கும் சரி பாதி பங்கு உண்டு. சரி சம உரிமை என்பதைவிட சரி சம கடமை என்பது சாலப்பொருந்தும். இல்லறம் என்பது படிக்கும் பாடச்சாலை மட்டும் அல்ல, அது ஒரு இனிய அனுபவம். அந்த அனுபவத்தை நல்ல படிப்பினையாகவும் நல் அறமாக ஒழுக்க சிந்தனையாகவும் மொத்தத்தில் வாழ்க்கை கல்வியாக தன் மக்கட்செல்வங்களுக்கு போதிப்பதில் என்ன தவறு நேர்ந்து விடப்போகிறது?

நமது குழந்தைகள் எதிர்க்காலத்தில் கதறி அழுவதில் இருந்து அவர்களை காப்பாற்றுங்கள். இந்த கொடுரமான உலகில் இருந்து தீமைகளை கற்றுக்கொள்வதில் இருந்து அவர்களை தடுத்து நல்ல பண்பான ஒழுக்க சீலர்களாக தடம் அமைத்துக் கொள்வதற்கு உதவுங்கள் குடும்பத்தில் அமைதி அவசியம். அது போல் உங்கள் உள்ளத்திலும் அமைதி மிக மிக அவசியம்.அப்பொழுதுதான் சமுதாயம் சிறக்கும், செழிக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s