மன அமைதியைப் பெறுவது எப்படி?

-         320 888zrமன அமைதியைப் பெறுவது எப்படி?

“அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன.” (அல்குர்ஆன் 13: 28)

ஆம்! மேற்சொன்ன இறைவசனம் மனிதர்களுக்கு நிம்மதியைப் பெற வழி வகுக்கும் என்றால் அது மிகையாகாது.

இன்று மனிதர்கள் எவ்வளவோ வளர்ச்சியடைந்து, தொழில்நுட்பத்தின் மூலமும், பொருளாதாரத்தின் மூலமும் எவ்வளவோ முன்னேறி விட்டான்.

தங்களுடைய தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தகவல் தொழில்நுட்பம் முன்னேறி விட்டது. இதையெல்லாம் வைத்து மனிதனால் எவ்வளவோ தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தளவுக்கு, அவனுடைய உள்ளத்துக்கு நிம்மதியை வாங்க முடியவில்லை.

அவனுடைய உள்ளம் நிம்மதியின்றி அலைந்து கொண்டிருக்கின்றது. இதைப் பெறுவதற்கு அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை.

இன்று மனிதர்களுக்கு இரண்டு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. ஒன்று உடல் ரீதியான நோய். மற்றொன்று மன ரீதியான நோய். உடல் ரீதியான நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்கின்றான். மன ரீதியான நோய்க்கு மருந்து எடுக்கத் தவறி விடுகின்றான்.

இதனால் வரும் பிரச்னைகள் ஒன்றல்ல. நூறல்ல. ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இதனால், தூக்கமின்மை, மலச்சிக்கல், தலைவலி, ஞாபக மறதி, கவனமின்மை போன்ற நோய்கள் நம்மை அறியாமலேயே ஆட்கொண்டு விடுகின்றன.

இந்த நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்கின்றோம். ஆனால், இந்த நோய்களுக்குக் காரணமான மனதளவிலான பிரச்னைக்கு தீர்வு என்ன என்பதைப் பற்றி சிந்திக்கத் தவறி விடுகின்றோம். அதனால்தான் இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

“இறைவனின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அவற்றை உங்களால் என்ன முடியாது.” (அல்குர்ஆன் 14: 34)

நிச்சயமாக இறைவன் நமக்கு கொடுத்துள்ள அருட்கொடைகளை எண்ணிப் பார்க்க தவறி விடுகிறோம். அதை எண்ணிப் பார்த்தால் நிச்சயமாக இறைவனை மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.

உலகைப் பார்க்க அழகான கண்களை நமக்கு தந்திருக்கின்றான். நல்லதைக் கேட்க காதுகளைத் தந்திருக்கின்றான். நல்லதைப் பேச நாவைத் தந்திருக்கின்றான். அழகான முடி, அழகான கை, கால்கள், அழகான முடி, அழகான பற்கள் – இவையெல்லாம் நமக்கு யார் கொடுத்தது என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

நம்முடைய தாய், தந்தையரால் வாங்கித் தர முடியுமா? உறவினர்களால் வாங்கித் தர முடியுமா?நண்பர்களால் வாங்கித் தர முடியுமா? இது இறைவன் நமக்குத் தந்த அருட்கொடைகள். எதை வேண்டுமானாலும் பணங்களைக் கொடுத்து வாங்கி விடலாம். பொருட்களைக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை இல்லை என்றால் சமூகம் நமக்கு கொடுக்கும் பெயர் ‘ஊனம்’.

இப்பொழுது சிந்தியுங்கள்! நாம் ஏன் இறைவனை நினைவு கூர்வதிலிருந்து விலகி நிற்கின்றோம்? ஏன் அவனுடைய படைப்புகளைப் பற்றி சிந்திக்க தவறுகிறோம். அவனுக்கு நன்றி செலுத்த மறுக்கின்றோம்.

இதை வரும் காலத்தில் நம்மை நாமே கேட்டுக் கொண்டு, இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். இறைவனை தினமும் காலையிலும், மாலையிலும் நினைவு கூர்வோம். பூரண மன அமைதியைப் பெறுவோம்.

-நெல்லை சலீம்

எல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது?

இன்று பெற்றோர்களுடன் பிள்ளைகள் எப்படி நடந்துக் கொள்கிறார்கள்? அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களின் சிறப்பை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஹதீஸிலே வந்துருக்கிறது, ‘சொர்க்கத்துடைய கதவுகளில் மேலான கதவு ஒன்று உள்ளது. நீங்கள் விரும்பினால் அதனை பாதுகாத்து கொள்ளலாம் அல்லது அதனை வீணாக்கி விடலாம்.’

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.. ”நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மேலான அமல் எது? எனவும் அல்லாஹு தாஆலாவிற்கு எல்லாவற்றையும் விட மிகவும் விருப்பமான அமல் எது? எனவும் வினவினேன். அதற்கு அவர்கள் ‘தொழுகையை அதன தன் நேரத்திலே தொழுவதாகும்’ என்று கூற மீண்டும் நான் ‘அதற்கு பிறகு என்ன? என்று வினவினேன். அதற்கு அவர்கள் ‘தாய் தந்தையருடன் நல்ல முறையில் பழக வேண்டும்’ எனக் கூற மீண்டும் நான் ‘அதற்குப் பிறகு என்ன? என்று வினவினேன். அதற்கு அவர்கள் ‘அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்வதாகும்’ என நவின்றார்கள்.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிகின்றார்கள்.. ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்திலே ஒரு மனிதர் ஆஜராகி ‘நான் ஜிஹாதில் பங்கு கொள்வதற்காக வேண்டி உங்களிடத்தில் அனுமதி தேடுகிறேன்’ எனக் கூறினார். அதற்கு நாயகமவர்கள் ‘உம் தாய் தந்தையர் உயிருடன் இருக்கின்றனரா? என வினவியதற்கு ‘ஆம்! உயிருடன் இருக்கின்றனர்’ என அம்மனிதர் பதிலளித்தார். ‘அவர்களுக்கு கித்மத் செய்வதைக் காட்டிலும் ஜிஹாதுடைய நன்மை குறைவுதான்’ என திருவாய் மலர்ந்தருளினார்கள்.”

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரிவாயத் செய்கிறார்கள்; ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார், நான் ஹிஜ்ரத் செய்யும் நாட்டம் கொண்டு வந்துள்ளேன். நான் வரும்போது என் தாய் தந்தையரை அழும் நிலையில் விட்டு விட்டு வந்தேன்’ எனக் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உடனே நீர் திரும்பி செல்வீராக! அவர்கள் இருவரையும் எப்படி நீர் அழ வைத்தீரோ அந்த விதம் சிரிக்க வைக்க வேண்டும்’

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். அறிவிக்கிறார்கள்; ”எந்த மனிதன் தன் இரணம் அபிவிருத்தி அடையவும் இன்னும் ஆயுள் நீடிக்கவும் இன்னும் சந்தோஷமாக இருக்கவும் விரும்புகிறானோ அவன் விருந்தினர்களை சங்கை செய்யவும் இன்னும் பெற்றோர்களுடன் அழகிய முறையில் நடக்கவும்.”

ஹஜ்ரத் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்; ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெற்றோர்களுக்கு அடிபணிகிரவர்களை பார்த்து இச்சொற்களை கூறினார்கள்.. ‘பெற்றோர்களுக்கு அடிபணிபவர்கள் மீது பரக்கத் உண்டாவதாக! அல்லாஹு தஆலா அவருடைய ஆயுளை நீடிக்க செய்வானாக!”

உங்கள் பெற்றோர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். இன்னும் உமக்கு முன்பாக அவர்கள் இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ வயோதிகத்தை அடைந்து விட்டால் (அவர்களின் இயலாமையை, பலஹீனத்தை நினைத்து) எப்பொழுதும் ‘சீ’ என்று கூறாதீர்கள் இன்னும் அவர்களிருவரையும் விரட்டாதீர்கள், இன்னும் அவர்களுடன் மிருதுவாகவும் அன்பாகவும் எப்பொழுதும் பேசுங்கள்.

ஹஜ்ரத் மாலிக் இப்னு ரபியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, ”யா ரசூலல்லாஹ்! தாய் தந்தையர் இறந்த பிறகும் அவர்களின் பணிவிடை பிள்ளைகள் மீது ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு ‘ஆம்’ என்று சொன்னார்கள். மேலும், ”தொழ வேண்டும். தாய் தந்தையருக்காக பாவமன்னிப்புத் தேட வேண்டும். அவர்கள் யாரிடமேனும் ஏதேனும் வாக்கு கொடுத்திருந்தால் அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும். தாய் தந்தையருக்கு யார், யார் உறவினர்கள் இருந்தார்களோ அவர்களுடன் நல்லபடி நடக்க வேண்டும். தாய் தந்தையர் யாருடன் இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் கண்ணியம் செலுத்த வேண்டும். இவையெல்லாம் தாய், தந்தையர் இறந்த பிறகு நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் அடங்கி உள்ளது.” (ஆதாரம்: அபூதாவூது)

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்… நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம், பெற்றோர்களுக்கு என்ன செய்வது? அவர்கள் இறந்த பிறகு என்ன கடமைகள் உள்ளது? என்று அறியாதவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.

இன்று பிள்ளைகள் எந்த அளவுக்கு பெற்றோர்களுக்கு மரியாதையும், கண்ணியமும், கனிவான சொற்கள் தருகிறார்கள் என்றால், நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோர்களுக்கு பயந்தக் காலம் போய்விட்டது. இப்போது பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பயப்படுகிறார்கள். எத்தனை பிள்ளைகள் அவர்களின் பெற்றோர்களுக்காக துஆச் செய்கிறது? கடமைக்காகவும், சடங்குக்காகவும் தான் செய்கிறார்கள் ஒழிய உண்மையான பாசத்திற்காக அல்ல. பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களைப் பார்க்க வரமாட்டார்கள். அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டு ஓடி வருவார்கள்.

எதற்க்காக? இந்த நடிப்பு? யாருக்காக இந்த பற்று? ஊரு மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், படைத்த இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். பெற்றோர்களை கதற வைக்கும் சில பிள்ளைகள். கண்ணீரில் முழுக வைக்கும் சில பிள்ளைகள். மனைவியின் பேச்சைக் கேட்டு, பெற்றோர்களை மன வேதைனைச் செய்யும் சில பிள்ளைகள். அவர்களும் ஒரு நாள் பெற்றோர்கள் நிலைக்கு வருவார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லையா? அல்லது புரியவில்லையா? இன்று பெற்றோர்களின் நிலைமை ரொம்ப மோசமாக தான் போய்கொண்டு இருக்கிறது.

சில வீட்டில் பெற்றோர்கள் வேலைக்கார்களைப் போன்று நடத்தப்படுகிறார்கள் என்பது உண்மை. அல்லாஹ்விடம் யாரும் தப்பிக்க முடியாது . அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்து.. தாயின் காலடியில் தான் சுவர்க்கம் இருக்கிறது. அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலமாக தான் சுவனத்தைப் பெற முடியும் என்று தெரிந்தே நாம் அலச்சியமாக இருக்கிறோம்.
அல்லாஹ் மிக அறிந்தவன் .

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்


12345அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்

* (நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 4:77)

* அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 8:60)

* அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு பரிபூரணமாத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (c2:272)

* (நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக் கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவது போல்) அல்ல. அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இவ்விஷயத்தில்) எவரும் ஒரு அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:49)

* நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்)புத்தகம் நம்மிடம் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 23:62)

* ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு. ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பரிபூரணமாகப் பெறுவதற்காக. ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 46:19)

* எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான-நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட மாட்டார். (அல்குர்ஆன் 20:112)

* எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு நன்மை உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார். (அல்குர்ஆன் 6:160)

* தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டு, ஸாலிஹான (நற்) செயல்களைச் செய்கிறார்களோ அவர்களைத் தவிர; (மற்றவர்கள் நரகக் கேட்டை சந்திப்பார்கள்) அத்தகைய (ஸாலிஹான)வர்கள் ஜன்னத்(சுவர்க்கத்)தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டி நற்பயன்கள்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 19:60)

* நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)

* (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவர்களது வலது கரத்தில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 17:71)

* ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அல்லாஹ் அனுப்பிய இறை தூதர் உண்டு; அவர்களுடைய தூதர்(அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 10:47)

* பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; அவர்களது செயல் குறிப்பேடு அவர்கள் முன் வைக்கப்படும்; இன்னும் நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 36:69)

* அல்லாஹ் (தன்) அடியார்களுக்க அநியாயம் செய்ய நாட மாட்டான். (அல்குர்ஆன் 40:31)