இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள் யார் யார்?

12715293_1221344741212972_2373857231403734419_n

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள் யார் யார்?

(சிறார்கள் மட்டுமின்றி பெரியோர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்)

1. நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்?

2. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்?

3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தந்தையின் சகோதரிகள் யார் யார்?

4. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியர் யார் யார்?

5. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார்கள் யார் யார்?

6. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார்கள் யார் யார்?

7. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் யார் யார்?

8. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேத்திமார்கள் யார் யார்?

1. வினா: நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்?

விடை:

தகப்பனார் அப்துல்லாஹ்,

பாட்டனார் அப்துல் முத்தலிப்ஈ,

முப்பாட்டனார் ஹாஷிம்,

முப்பாட்டனாரின் தகப்பனார் அப்துல் முனாஃப்.

2. வினா: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்?

விடை:

ஹாரிஸ

கஸம

ஜுபைர

ஹம்ஸா (ரளியல்லாஹு அன்ஹு)

அப்பாஸ் (ரளியல்லாஹு அன்ஹு)

அபூதாலிப

அப்துல் காப

முகைர

லர்ரார

கீதாக

அபூலஹப்

3. வினா: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தந்தையின் சகோதரிகள் யார் யார்?

விடை:

ஸஃபிய்யாஹ

ஆத்திக

அறவ

உம்ம

பார

உமய்ம

4. வினா: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியர் யார் யார்?

விடை:

கதீஜா ரளியல்லாஹு அன்ஹா,

ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா,

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா,

ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா,

உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா,

உம்மு ஸல்மா ரளியல்லாஹு அன்ஹா,

ஜைனப் பின்த் கஸீனா ரளியல்லாஹு அன்ஹா,

மைமுனா ரளியல்லாஹு அன்ஹா,

ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா,

ஜைனப் பின்த் ஜஹஷ் ரளியல்லாஹு அன்ஹா,

ஜுவைய்ரியா ரளியல்லாஹு அன்ஹா.

5. வினா: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார்கள் யார் யார்?

விடை:

அல் காஸிம் (இவர் சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார்.)

இப்ராஹீம்

6. வினா: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார்கள் யார் யார்?

விடை:

ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா,

ருகைய்யா ரளியல்லாஹு அன்ஹா,

உம்மு குல்ஸும் ரளியல்லாஹு அன்ஹா,

ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா.

7. வினா: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் யார் யார்?

விடை:

ஹஸன் ரளியல்லாஹு அன்ஹ

ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹ

முஹ்ஸின் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய மூவராவர்.

8. வினா: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேத்திமார்கள் யார் யார்?

விடை:

ருகைய்ய

ஜைனப

குல்தூம் ரளியல்லாஹு அன்ஹும் ஆவர்.

நன்றி: முகமதுஅலி.

மரணத்தின் வலி ஏற்படும் விதம்..!

fathima344                           

       மரணத்தின் வலி ஏற்படும் விதம்..!

         N. மீரான்    

உலகில் வாழும் பல உயிரினங்கள் குறித்தும் குர்ஆனில் பல அத்தியாயங்கள், வசனங்களில் கூறப்பட்டுள்ளது. குர்ஆன் தனக்கேயுரிய தனித்தன்மையால் விவரித்துக் கூறாமல் சுருக்கமாக, மறைபொருளாகவே ஒவ்வொன்றையும் கூறியிருக்கும். அந்த மறை பொருளாகக் கூறப்பட்டிருப்பதை கீழ்க்காணும் வசனங்கள் நமக்கு உணர்த்தும்.

“அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்து வானவர்கள் அவர்களை மரணிக்கச் செய்யும்போது எப்படியிருக்கும்“ (அல்குர்ஆன் 47:27)

(ஏக இறைவனை) உயிர்களைக் கைப்பற்றும் போது, அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!” (அல்குர்ஆன் 8:50)

o உங்கள் முகங்களிலும், முதுகுகளிலும் என்ற வார்த்தைகளை இறைவன் கூறியிருப்பதற்கான கேள்வி நமக்குள் எழும்பும். விடை காணவும், மனிதனால் எளிதாகப் புரிந்து கொள்ளவும் முடியாது. ஆனாலும், ஒரு உம்மத்தாக இறைவன் வஹியாக அனுப்பிய செய்தியை விளக்க கடமைப்பட்டுள்ளோம். இது நம்முடைய பணி:

“கடினமாகக் கைப்பற்றுவோர் (வானவர்கள்) மீது சத்தியமாக”. (அல்குர்ஆன் 79:1)

“மென்மையாகக் கைப்பற்றுவோர் (வானவர்கள்) மீது சத்தியமாக”. (அல்குர்ஆன் 79:2)

o இரண்டு விதமாக மனித உயிர்களைப் பிடிப்பதாக, மலக்குகள் மீது சத்தியமிட்டுக் கூறுகிறான் இறைவன்.

o மரணத்தருவாய் துன்பம் தருவது: இந்த துன்பம் மனித உடலில் எங்கிருந்து வருகிறதெனில், மனித உடலில் உணர்ச்சி மண்டல நரம்புகள் மூலமாக மூளைக்கு வலியின் உணர்வுகள் எடுத்துச் செல்லப்படுகிறது.

உடம்பின் அனைத்து பாகங்களிலும் உணர்ச்சி மண்டல நரம்புகள் இருக்கின்றன:

மனித உடம்பு முழுவதுமுள்ள தோல்களில் இருக்கும் உணர்ச்சி செல்களுக்குப் பெயர் “Corpuscles – கார்ப்ப செல்ஸ்”.

இதன் பணி, ‘தொடு உணர்ச்சி, தட்பவெப்ப உணர்ச்சி, வலி உணர்ச்சிகளைத் தோல்களில் கண்டறியக் கூடியது. மனித தோல்களில் எங்காவது வலி ஏற்பட்டால் அதற்கான செய்தியை பிற நரம்புகள் மூலம் மின் துடிப்புகளாக முதுகுத் தண்டுவடத்திற்கு கொண்டு செல்லும். பின்னர் மூளைக்குச் செல்லும் பகுதியான “Spinothalamic- ஸ்பைனோதலாமிக்” பாதையில் மூளைக்குக் கொண்டு சேர்க்கும்!

தோல் வெளிக்காட்டும் வலிகளை இந்த ஸ்பைனோதலாமிக் தான் மூளையிலிருந்து கொண்டு செல்கிறது!

தோல்வழியாக வலிகளை மூளைக்கு எடுத்துச் செல்லும் மின் துடிப்புகள் உடலின் அனைத்து பாகங்களிலும் இருக்கின்றன.

உடலின் ஒரு பகுதியில் சூடுபட்டால், மூளையில் இருக்கும் சுற்றுகளுக்கு உடனடி சமிக்ஞையாக முன் பாராவில் குறிப்பிடப்பட்டுள்ள கார்ப்பசெல்கள் அசுர வேகத்தில் பயணித்து எடுத்துச் செல்கின்றன. அதே போன்று, தட்பவெப்ப உணர்ச்சி செல்களில், உடலியல் நரம்புகள் இணைந்திருந்தால் தட்பவெப்பம் மாறும்போது உடனடியாக மூளைக்கு எடுத்துச் செல்கின்றன.

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பணிகள் இருப்பதால், முன் தயாரிப்பு எச்சரிக்கையுணர்வுடன் பணியாற்றுகின்றன!

o உடம்பிலுள்ள நரம்புகள், இணைப்புகள், தொடர்புகள் மூளையின் சுற்றுகளோடு எங்கு இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மனிதரால் கணக்கிட முடியாது.

தாயின் கருவில் குழந்தையாக இருக்கும் போது இவைகளை, இறைவன் வளர்க்கிறான். இவையனைத்தும் உடலுள் கடினமாகப் பிணைக்கப்பட்டிருப்பதால், மனிதனால் எந்த மாற்றமும் செய்ய இயலாது.

மனித உடம்பின் வெளி உறுப்புகள் அகற்றப்பட்டாலும், அகற்றப்பட்ட இடத்தின் நுனியில் உணர்ச்சி நரம்புகள் இருந்தால், அந்த இடத்தில் மின் துடிப்புகள் இருக்கும். அதன் காரணமாக வலி உணர்ச்சி ஏற்படும்.

முன் கூறப்பட்டுள்ள வலி உணர்ச்சிகளில் “nociseptive – நோசிசெப்டிவ்” என்ற ஒன்றிருக்கும். உண்டாகும் வலியை அதிகமாக்கிக் கொண்டு செல்லக்கூடியது இது. உறுப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் இந்த நோசி செப்டிவ் இருக்காது. அதனால் வலி வெளிப்படையாக உணரமுடியாது. அகற்றப்பட்ட நபருக்கு வரக்கூடிய வலியை மருத்துவ உலகம் “phantom pain – மறைமுக வலி” என்று பெயிரிட்டிருக்கிறது.

மனிதருக்குள் இருக்கும் உணர்ச்சி மண்டல நரம்புகள் உடம்பின் உள்ளே உள்ள உறுப்புகளிலிருந்து ஆரம்பித்திருக்கும். ஒட்டுமொத்த உறுப்புகளுடைய நரம்புகளும் முதுகுத்தண்டுக்குச் சென்றடைந்து கொத்தாகக் குவிந்திருக்கும். இதனை “முதுகின் வேர்கள்” எனக் குறிப்பிடுவர்.

உறுப்புகளிலிருந்தும் உணர்ச்சி நரம்புகள் தொடங்குவதால், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளில் நோய் வந்தால், இந்த உறுப்புகளிலிருந்து வரக்கூடிய உணர்ச்சி சமிக்ஞைகள் வலியை உணர்த்தாது.

முதுகுத்தண்டுகளில் கொத்தாகக் குவிந்திருக்கும் உணர்ச்சி நரம்புகளிலிருந்து வலி வெளிப்படும்! எடுத்துக்காட்டுக்கு இதய சம்பந்த நோய் வந்துள்ள நபருக்கு, இடது புஜத்தில் வலி ஏற்படும்! தொடக்க இடத்தில் காட்டப்படாத வலி, முடிவு இடத்தில் உண்டாகிக் காட்டும்.

ஆழ்ந்த உறக்கத்திலிருப்போர், தன்னுணர்வற்ற நிலையி ல் இருப்போரால் வலிகளை உணர முடியாது. காரணம், மூளையில் இருக்கும் உணர்ச்சி மண்டலம் மூலம் மூளைக்குச் செல்லும் உள்ளீடுகள் தடை செய்யப்பட்டிருக்கும் இது உடலுக்கும், மூளைக்குமான தொடர்பு.

ஆன்மாவுக்கும், மூளைக்குமான தொடர்பு என்ன என்று ஆராய்ந்தால், அறிதல் மிகமிகக் குறைவு! மரண அனுபவமும், இறை நம்பிக்கையும் வேறு, வேறு! வலியின் உணர்ச்சிகளுக்கும், ஆன்மாவுக்கும் தொடர்பு இருக்கின்றதா?

உறங்கிய நிலையில் ஒருவர் இறப்பை சந்தித்தால் அவர் எந்த வலியையும் உணர முடியாது.

உறக்கத்துக்கும், இறப்புக்குமான செய்திகள் பலவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

“இறைவா! உன் பெயராலேயே வாழ்கிறேன். உன் பெயராலேயே இறப்பேன்” என்று உறங்கச் செல்லும் முன்பு கூறுவார்கள். எழும்பிய பிறகு “இறைவா! இறப்புக்கு அடுத்து எனக்கு ஒரு வாழ்வைத் தந்துள்ளாய்” என்று கூறுவார்கள். (நூல்: ஸஹிஹ் முஸ்லிம் – 35:6549)

“அவன் தான் உங்களை இரவில் மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றை எல்லாம் அறிந்திருக்கிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்ட தவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; (அல்குர்ஆன் 6:60) Continue reading

மன திருப்தி

-yy

மன திருப்தி

எவர் தம்மிடம் இருக்கும் ஒரு நாளைக்குப் போதுமான சாதத்தைக் கொண்டு தம் மனத்துக்கு நிம்மதியையும் தம் உடலுக்குத் தெம்பையும் கொடுத்துக் கொள்கிறாரோ அவர் உலகிலுள்ள அனைத்தும் அளிக்கப்பட்டவர் போலாவார் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு மிஹ்ஸனில் கதமீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

எவர் இஸ்லாமிய நேர்வழியை அடைந்து அவரால் இயன்றதைக் கொண்டு வாழ்க்கை நடத்தி போதுமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு நல்வாழ்வு உண்டாகட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: புலாளதுப்னு உபைது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு நம்பிக்கை கொண்டிருப்பின் நிச்சயமாக அவன் உங்களுக்கு உணவளிப்பான், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று. அவை காலையில் வெறும் வயிற்றோடு சென்று மாலையில் வயிறு நிரம்ப உண்டு திரும்புகின்றன என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: உமர் ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி)

செல்வம் என்பது உலகப் பொருள்களின் அதிகரிப்பில் இல்லை. எனினும் செல்வம் என்பது மனத்தின் செல்வமேயாகும். போதுமென்ற மனமேயாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

உங்களில் எவரேனும் தம்மைவிட அதிகப் பொருளுடையவரையும் தோற்றத்தில் தம்மைவிட மேலாக உள்ளவரையும் காண நேரிட்டால் அப்பொழுது அவர் தம்மைவிட இவ்விஷயங்களில் கீழாக உள்ளவரை நோக்கவும், ஏனெனில் இவ்விதம் செய்வது நீங்கள் அல்லாஹ்வுடைய அருளை, அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருளை குறைவாகக் கருதாமலிருக்க மிகவும் உதவியாயிருக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி, முஸ்லிம், திர்மிதி)

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)
http://www.readislam.net/portal/archives/4443#comment-4428

பொருளுணர்ந்து ‘துஆ”ச்செய்வோம்

6666 பொருளுணர்ந்து ‘துஆ”ச்செய்வோம்

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

திருக்குர்ஆனில் ஏராளமான ‘துஆ’க்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு ‘துஆ’வும் நம்மைப்படைத்த அந்த ஏக இறைவனே நமக்கு அவற்றைக்கொண்டு “அவனிடம்” கேட்குமாறு கற்றுக்கொடுப்பது போன்று அமைந்திருப்பதை என்றைக்கேனும் நாம் கவனித்திருக்கிறோமா?

தொழுகையாளிகளில் எத்தனை பேர் ‘துஆ’வின் அர்த்தத்தை விளங்கி ‘துஆ’ கேட்கிறோம்? மஸ்ஜிதில் இமாம்கள் செய்கின்ற ‘துஆ’வுக்கு “ஆமீன்” சொல்வதோடு சரி…! அதன் பொருள் என்னவென்பதைப் பற்றியெல்லாம் நமக்கு தெரிந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருப்பதில்லை. எல்லாம் நமது இமாம்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று நினைப்புதான் காரணமோ என்னவோ?!.

மேலுள்ள திருக்குர்ஆனிலுள்ள (நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் கேட்டதாக அல்லாஹ் குறிபிட்டுள்ள)ஒரு ‘துஆ’வின் அர்த்தத்தை ஒருமுறை படித்துப்பாருங்கள். எவ்வளவு பொருள் நிறைந்த ஒரு அற்புதமான ‘துஆ’ இது என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

இம்மை, மறுமை இரண்டிற்குமே பயனளிக்கும் இந்த பிரார்த்தனை; கலிமா சொன்ன ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய ‘துஆ’ என்று சொன்னால் அது மிகையல்ல.

நமது பகுதி முஸ்லிம்கள் கூட்டு ‘துஆ’வை மட்டும் போதுமானதாக ஆக்கிக்கிகொண்டதால் ‘துஆ’வின் அர்த்தத்தைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று எண்ணிவிட்டார்களோ என்னவோ…!

பொருள் விளங்காமல் கேட்பது எவ்வளவு விசித்திரமான வினோதம் என்பதையெல்லாம் சற்றேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

”தன்னிடம் கேட்காத அடியானைப்பற்றி அல்லாஹ் கோபம் கொள்கிறான்” என்பதை மறந்தது எனோ?!

எதையெதையோவை எல்லாம் மனப்பாடமிடும் நாம் அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பிரார்த்தைகளை பொருளுணர்ந்து கற்பதில் அலட்சியம் செய்வது எவ்வளவு பெரிய கைசேதம் என்பதை எண்ணிப்பாருங்கள்.

திருக்குர்ஆனிலுள்ள ஒவ்வொரு ‘துஆ’வும் மகத்தான பொக்கிஷம் என்பதை மறந்திட வேண்டாம்.பொக்கிஷத்தை உதாசீனப்படுத்தினால் நஷ்டம் நமக்குத்தான்.

மேலே உள்ள துஆ…

ஒவ்வொரு பெற்றோரும் தாங்கள் வாழக்கூடிய காலத்திலேயே தங்களது பிள்ளைகளுக்கு மேலே உள்ள துஆ’வை கற்றுக்கொடுத்தால் தான் அவர்கள்(பெற்றோர்கள்) வாழும் காலத்திலும், மரணித்த பின்பும் அவர்களின் சந்ததிகள் ‘தங்களது பெற்றோர்களுக்காக’ அல்லாஹ்விடம் அழகிய முறையில் “அவன்” குறிப்பிட்டுள்ள முறையில் பிராத்தனை செய்ய இயலும்.

‘துஆ’ ஒரு மிகச்சிறந்த வணக்கம் என்பதை மறந்துவிட வேண்டாம். இன்றே முயற்சி எடுப்போம், நாம் மட்டுமல்ல நமது குடும்பத்தார்கள், உற்றார்கள் உறவினர்கள், ஊர்மக்கள் அனைவரும் இந்த மிக மிக முக்கியமான வணக்கத்தை கற்றுக்கொள்வதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

அல்லாஹ் நல்லருள் புரிவானாக

– எம்.ஏ.முஹம்மது அலீ

 

 

உம்ரா செய்வது எப்படி?

ww    ‘ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

‘ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: நஸயி, இப்னுமாஜா)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களும் இன்னும் பல ஹதீஸ்களும் உம்ராவின் சிறப்புகளைக் கூறுகின்றன.
 
உம்ராச் செய்வதற்கான வழிகாட்டுதல் சுருக்கமாகத் தரப்படுகிறது.

 

இஹ்ராம் :

மீக்காத் எனும் எல்லையை அடைந்ததும் குளித்து விட்டு இஹ்ராம் உடையை அணிந்து கொள்ள வேண்டும். (மீக்காத்திலிருந்து கஃபாவை தவாஃப் செய்ய ஆரம்பிக்கும் வரை வலது தோளைத் திறந்த வைத்துக் கொள்வது நபிவழிக்கு மாற்றமானது.)
 பர்ளுத் தொழுகையின் நேரமாக இருந்தால் அதனைத் தொழுதுவிட்டு அல்லது உளூவுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துக்களைத் தொழுது விட்டு உம்ராவுக்கு நிய்யத் வைக்க வேண்டும். (இஹ்ராமிற்கென்று பிரத்தியேகமான எந்தத் தொழுகைக்கும் நபிவழியில் ஆதாரம் இல்லை.)

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ்உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2194, 2195
உம்ராச் செய்வதாக மனதால் நினைப்பதே நிய்யத் எனப்படும். அவ்வாறு நினைத்து விட்டு لَبَّيْكَ اَللهُمَّ عُمْرَةً(லப்பைக அல்லாஹும்ம உம்ரதன்) என்றோ اَللهُمَّ لَبَّيْكَ عُمْرَةً (அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்) என்றோ கூற வேண்டும்.
 

(  இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்டவைகள்     கடைசியில்     தரப்பட்டுள்ளது  )  

இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார்
(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092
  2.தல்பியா
உம்ராவுக்கு நிய்யத் வைத்ததிலிருந்து கஃபதுல்லாஹ்வைச் சென்றடையும் வரை தல்பியாவைத் திரும்பத் திரும்பச் செல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் சத்தத்தை உயர்த்தியும் பெண்கள் மெதுவாகவும் தல்பியாவைச் சொல்ல வேண்டும். தல்பியா வாசகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

    لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ (அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்நிஃமத லக வல் முல்க், லாஷரீக லக்.)

”லப்பைக்அல்லாஹும்ம லப்பைக்லப்பைக் லாஷரீக லக லப்பைக்இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்கலாஷரீக லக” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 1549, 5915
‘தல்பியாவின் சிறப்பு’
எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ 758
3. தவாஃப் செய்தல்:

மஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் வுழூச் செய்து விட்டு கஃபதுல்லாஹ்வை நோக்கிச் செல்ல வேண்டும். தனது வலது தோளைத் திறந்தவராக ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதனைத் தனது வலது கையினால் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூற வேண்டும். முடிந்தால் அக்கல்லை முத்தமிடலாம். முடியாவிட்டால் கல்லைக் கையினால் தொட்டு கையை முத்தமிட வேண்டும். அதற்கும் முடியவில்லையென்றால் அதனை முன்னோக்கி அல்லாஹுஅக்பர் என்று கூறி தனது வலது கையால் அதன்பால் சுட்டிக்காட்ட வேண்டும். அப்போது கையை முத்தமிடக் கூடாது.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.    அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 1611
அவ்விடத்திலிருந்து தவாiஃப ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வ திலிருந்து ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வதை வந்தடைவது ஒரு சுற்றாக கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.

ஒவ்வொரு சுற்றின் ஆரம்பத்திலும் முடிந்தால் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது அல்லது அதனைத் தொட்டு கையை முத்தமிடுவது அல்லது அதனை நோக்கிக் கையைக் காட்டுவது நபிவழியாகும்.

ஆரம்ப மூன்று சுற்றுக்களிலும் தொங்கோட்டமாகவும், ஏனைய நான்கிலும் சாதாரணமாகவும் செல்ல வேண்டும்.
தவாஃபின் போது (ஹஜருல் அஸ்வதிற்கு முன்னாலுள்ள) ருக்னுல் யமானி என்ற மூலையை அடைந்தால் பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூறி அதனைத் தொட வேண்டும். கையை முத்தமிடக் கூடாது. தொட முடியா விட்டால் அதற்குக் கையைக் காட்டக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.   அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)   நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தவாஃப் அல்குதூம்‘ செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: புகாரி 1644, 1617
    ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வதை அடையும் வரை,
கஅபாவின் இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப் படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபி வழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்நான்கு மூலைகளில் “யமானி‘ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)   நூல்: புகாரி 166, 1609
ருக்னுல் யமானிக்கும்ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே “رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار (ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்”) என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப்(ரலி)   நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616
 
(பொருள்: எங்கள் இரட்சகா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) இது அல்லாமல் தவாஃபின் போது ஒதுவதற்கென்று எந்த துஆக்களும் ஹதீஸ்களில் வர வில்லை. எனவே தான் விரும்பிய துஆக்களைத் தனக்குத் தெரிந்த மொழிகளில் கேட்கலாம். அல்குர்ஆன் ஓதலாம். மேலும் திக்ருகள் செய்யலாம்.
தவாஃப் செய்து முடிந்ததும் வலது தோளை மூடிக் கொள்ளலாம்.
தவாஃபின் சிறப்பு
யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2947
சாட்சி சொல்லும் ஹஜருல் அஸ்வத்
கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார் இதை முத்தமிட்டாரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதீ 884

 4. தவாஃப் செய்து முடிந்தால்…?:
தவாஃப் செய்து முடிந்ததும் இரண்டு ரக்அத்துக்கள் மாகமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்றுதொழ வேண்டும்.(முஸ்லிம் 2137 (முதலாவது ரக்அத்தில் சூரத்தல் ஃபாத்திஹாவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் ஃபாத்திஹாவுடன் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் ஓத வேண்டும்.

இந்த தொழுகையை மாகமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்று தொழுவது சிறந்தது. முடியாவிட்டால் பள்ளியின் எந்த இடத்திலும் தொழலாம்.
தொழுது முடிந்ததும் ஸம்ஸம் தண்ணீரை அதிகமாகக் குடிப்பது சுன்னத்.

ஜம்ஜமின் சிறப்பு
அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும். உண்ணுபவருக்கு உணவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 4520
  5. ஸயீ செய்வது:
தவாஃப் செய்து, தொழுது முடிந்தால் ஸயீ செய்வதற்காக ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு “ஸஃபா‘ “மர்வாவுக்கு இடையே ஓடினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி(  நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188
ஸஃபாவை நெருங்கும் போது……..,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்” என்றإِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِر الله فَمَنْ حَجَّ الْبَيْتَ أَو
اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ الله شَاكِرٌ عَلِيْمٌ (2:125) வசனத்தை ஓதினார்கள். “அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக” என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி لآ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، لآ إِلهَ )إِلاَّ اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹுலஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தாஅன்ஜஸ வஃதாவநஸர அப்தாலஹஸமல் அஹ்ஸாப வஹ்தா” )என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) “பதனுல் வாதீ‘ (பச்சை அடையாளம் இடப்பட்ட  தூண்களுக்கு இடையில்)என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.  அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்கள்: முஸ்லிம் 2137
(பதனுல் வாதீ‘ என்ற இடத்தில்  . பெண்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.)

ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்

ஸஃபாவிலிருந்து மர்வாவுக்குச் செல்வது ஒரு சுற்றாகும். மர்வாவிலிருந்து மீண்டும் ஸஃபாவுக்கு வருவது இரண்டாவது சுற்றாகக் கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஏழாவது சுற்று மர்வாவில் முடியும்.
”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்”. அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)   நூல்: முஸ்லிம் 2137

ஸஃபா, மர்வாவில் ஓதுவதற்கென்று ஏற்கனவே கூறப்பட்ட திக்ருகளைத் தவிர ஸயீயில் ஓதுவதற்கென்று குறிப்பாக ஏதும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட வில்லை. எனவே தவாiஃபப் போன்று குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், துஆச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
ஸயீ செய்வதற்கு வுழு அவசியமில்லை.
 6. ஸயீ முடிந்ததும்:
ஸயீ முடிந்ததும் தலை முடியை முற்றாக மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும்.
கத்தரியால் சில முடிகளை மட்டும் வெட்டுவது மிகப் பெரிய தவறாகும்.
தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: அபூதாவூத் 1694
இத்துடன் உம்ரா நிறைவேறி விடுகின்றது. ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல்பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்தல் மூலம் உம்ரா முடிவுக்கு வருகின்றது
——————————————————————————————————–
இப்போது உம்ராவின் வணக்க வழிபாடுகளை ஒருமுறை பார்ப்போம்.

1. குளித்தல்.

2. அனுமதிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொள்ளுதல்.
3. தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறுதல்.
4. ஹிஜ்ர் உட்பட ஏழு முறை கஅபாவில் தவாஃப் செய்தல்.
5. மகாமு இப்ராஹீமில் இரு ரக்அத்துக்கள் தொழுதல்.
 . ஸஃபாமர்வாவுக்கு இடையில் ஸஃயீ செய்தல்
7 . தலை முடியைக் கத்தரித்துக் கொள்ளுதல்.
மேற்கண்ட வணக்கங்களைச் செய்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது.

உம்ராவில் இடம்பெற்ற இந்த வணக்கங்களில் 1. இஹ்ராம், 2. கஅபாவை தவாஃப் செய்தல், 3. ஸஃபாமர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில் உம்ரா இல்லை என்றாகிவிடும்

மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு
நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1727

***************************************************************************************************************************  இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்

1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது.

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும்உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோதலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு.  (அல்குர்ஆன் 2:196)
பேன்பொடுகுபுண் போன்ற தொந்தரவுகளால் தலைமுடியை மழிக்க நேர்ந்தால் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று “ஸாவு‘ பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!” என்றார்கள்.   அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703

2. நகங்களை வெட்டக் கூடாது. 

 உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)  நூல்: முஸ்லிம் 3653, 3654

குர்பானி கொடுப்பவர் முடியையும்நகங்களையும் வெட்டக் கூடாது” என்ற இந்தத் தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியது தான்.

3. நறுமணம் பூசக் கூடாது

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோதலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் “தல்பியா‘ கூறியவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851
அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப் படுவார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் அணிந்தவர் நறுமணம் பூசக் கூடாது என்பதை நாம் அறியலாம்.

4. திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது.

இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான்(ரலி)  நூல்: முஸ்லிம் 2522, 2524

      5உடலுறவு கொள்ளக் கூடாது.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோகுற்றம் செய்வதோவிதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:197)

6. ஆசையுடன் தொடுதல்கட்டியணைத்தல்முத்தமிடுதல் போன்றவை கூடாது. 

மேற்கண்ட வசனத்தில் உடலுறவு கூடாது என்பதைக் குறிக்க ரஃபத்‘ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதில் ஆசையுடன் தொடுதல்கட்டியணைத்தல்முத்தமிடுதல் போன்ற அனைத்தும் அடங்கும்.

உடலுறவு தான் கூடாதுமற்றவை கூடும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

7. வேட்டையாடுதல் கூடாது

நம்பிக்கை கொண்டோரே! “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?’ என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும்உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களைச் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:94)
நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடுமாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:95)
உங்களுக்கும்ஏனைய பயணி களுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும்அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங் கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப் படுவீர்கள். (அல்குர்ஆன்5:96)
இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட செயல்களில் இந்த ஏழு காரியங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை ஆகும்.
இஹ்ராமில் ஆண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவை

1. தலையை மறைக்கக் கூடாது

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோதலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் “தல்பியா‘ கூறியவராக எழுப்பப்படுவார்” என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839
மறுமையில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.

2. தையல் ஆடை அணியக் கூடாது.

இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் சட்டையையோதலைப் பாகையையோதொப்பியையோகால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம்வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்” என்று விடையளித்தார்கள்.  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)   நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794

பெண்களுக்கு மட்டும் தடையானவை

இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)) நூல்: புகாரி 1838
இவ்விரண்டும் பெண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவையாகும்.
இஹ்ராமுக்குப் பின்னால் தடுக்கப் பட்ட காரியங்களில் ஆண்களும் பெண்களும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தாம்பத்யம் போன்ற காரியங்களில் ஈடுபட்டு ஹஜ்உம்ரா போன்ற வணக்கத்தைப் பாழாக்கி விடக் கூடாது.
தலைமுடி மற்றும் நகங்களைக் களைவது இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்டு உள்ளதால் அவற்றை இஹ்ராமுக்கு முந்தியே முடித்து விட வேண்டும்.
இஹ்ராமின் எல்லையை அடைந்ததும், “லப்பைக்க உம்ரத்தன் ஃபீஹஜ்ஜத்தின்” அல்லது “லப்பைக்க உம்ரத்தன்” என்று கூற வேண்டும்.

இந்த இடத்தில் சிலர், ”நான் அல்லாஹ்வுக்காக உம்ரா செய்கிறேன்இந்த உம்ராவை இலேசாக்கி வை” என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை

 உம்ராவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!